Home கட்டுரை குழந்தைகளுக்காக ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் கூகுள் செய்த நடவடிக்கை…

குழந்தைகளுக்காக ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் கூகுள் செய்த நடவடிக்கை…

340
0
Google office
Share

இன்றைய நவீனத் தொழில்நுட்ப உலகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலும் தற்போது கொரோனா பரவல் காரணமாகப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வீட்டில் இருந்தவாறே ஸ்மார்ட் வகுப்பு நடத்தி வருகின்றனர்.

குழந்தைகள் பயன்படுத்தும் போது பாதுகாப்பு சற்று குறைவாகத்தான் உள்ளது. தேவையற்ற விளம்பரங்கள், வீடியோக்கள் போன்றவற்றைக் குழந்தைகள் பயன்படுத்தும் வருவதால் கவனம் சிதறல் இருக்க வாய்ப்புள்ளது. தற்போது இது போன்ற பாதுகாப்பு குறைபாடுகளைத் தடுக்கும் வகையில் கூகுள் நிறுவனம் ஒரு வழி முறைகளை அறிமுகம் செய்துள்ளது, அதில் ஒன்றுதான் kids friendly mode எனும் வசதி.

தங்கள் இருப்பிடத்தைக் கூகுள் கண்காணிக்கிறது.. இதோ தடுக்கும் எளிய வழிமுறை !

இனி மேல் வரும் மொபைல் போன்கள், டேப்லட்களில் இந்த வசதியுடன் வெளியிடக் கூகுள் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்ற வீடியோக்கள், புத்தகங்கள், பொழுதுபோக்கு அப்ளிகேஷன் மட்டுமே குழந்தை பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் இயங்கு தளங்களில் கிடைக்கும்.

இது குழந்தைகளின் பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும் என ஒரு கூகுள் நிறுவனம் கருதுகிறது. விரைவில் இந்த வசதி லெனோவா டேப் களில் வர உள்ளதாகத் தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here