Home செய்திகள் இந்தியா சூர்யாவை அடுத்து விஜய்க்கு வலைவிரிக்கும் அமேசான்…

சூர்யாவை அடுத்து விஜய்க்கு வலைவிரிக்கும் அமேசான்…

359
0
Share

சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று என்ற திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் அக்டோபர் 30ஆம் தேதி வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் படத்தை அமேசான் ஓடிடி தற்போது 60 கோடி ரூபாய்க்கு வாங்கி அக்டோபர் 30-ஆம் தேதி வெளியிட உள்ளது. ஏனென்றால் கொரோனா ஊரடங்கு நாளுக்கு நாள் நீட்டிக்கப்பட்டு வருவதால் தயாரிப்பாளர்கள் கடன் சுமையைத் தாங்க முடியாமல் இது போல் விற்பனை செய்து தம் கடன் சுமையிலிருந்து தப்பிக்கலாம் நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.Aerospace in Amazon

இந்த வரிசையில் தற்போது பல்வேறு நடிகர்களும் களமிறங்கியுள்ளனர். ஏனென்றால் பல நடிகர்கள் தங்களுடைய படத்தைத் திரையரங்குகளில் வெளியிடக் காத்திருந்தனர். ஆனால் முன்னணி நடிகரான சூர்யாவின் படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராக இருப்பதால் தம் படமும் வெளியிட முன்வந்துள்ளனர். மேலும் தீபாவளி விருந்தாக அநேக திரைப்படங்கள் வாங்கவும் ஓடிடி தளங்கள் தயாராக உள்ளனர்.

இதனையடுத்து தற்போது அமேசான் ஓடிடி தளம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடந்த தமிழ் புத்தாண்டிற்கு வெளிவரத் தயாராக இருந்த மாஸ்டர் படத்தை 100 கோடி ரூபாய் வாங்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனால் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் படத்தை விற்றுவிடலாம் என்று யோசனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கூகுள் டிரைவ் பயன்படுத்துபவரா நீங்கள் ? இதோ எச்சரிக்கை !

ஏனென்றால் தயாரிப்பாளர் சேட்டிலைட் விற்பனை, வெளிநாட்டு உரிமம், ஹிந்தி டப்பிங், என பல்வேறு முறையில் 200 கோடி ரூபாய் வரை வியாபார நடைபெறும் என்று எண்ணுவதாகும், இதை விட்டால் வேறு வழி இல்லை என்று எண்ணுவதாகும் மாஸ்டர் படத் தயாரிப்பாளர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.master

அமேசான் ஓடிடி தளத்தில் சூர்யா படத்தை வாங்கியது போல் விஜய் படத்தை வாங்கிவிட வேண்டுமென மும்முரமாக இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது என்ற செய்தி உண்மையா என்பது அதிவிரைவில் வெளியாகிவிடும். எனவே காத்திருந்து பார்ப்போம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here