Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் யூடியூப் சேனலில் அசத்தும் 9 ஆம் வகுப்பு மாணவி அபிலஷா சௌந்தரராஜன்!…

யூடியூப் சேனலில் அசத்தும் 9 ஆம் வகுப்பு மாணவி அபிலஷா சௌந்தரராஜன்!…

886
0
Student Abilasha Soundarajan
Share

இந்திய சமூகம் நமது குழந்தைகளை எப்படி அணுகுகிறது, பெற்றோர்களும் குடும்பமும் குழந்தைகளைப் பற்றி எத்தகைய கண்ணோட்டத்தை கொண்டிருக்கிறார்கள்?..

குழந்தைகள் ஏதேனும் கேள்விகளை கேட்டால், வாயமூடிட்டு இரு, நீ சின்ன பையன் சும்மா இரு, நீ சின்னப்பொண்ணு சும்மா இரு, அதெல்லாம் உனக்குத் தேவையில்லாத விசயம் என்று கூறி வாயை அடைப்பார்கள்.

குழந்தைகளை நீங்கள் கவனித்துப் பாருங்கள். உங்கள் குழந்தைகளையோ அல்லது உங்கள் பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளையோ ஒரு நாள் கவனித்துப்பாருங்கள்.

தன்னை சுற்றியுள்ளவர்களிடம் அந்த குழந்தை ஒரு நாளைக்கு எத்தனை கேள்விகளை கேட்கிறது என்று கவனித்துப்பாருங்கள். குழந்தைகள் குறித்த ஒரு ஆய்வின்படி சராசரியாக ஒரு குழந்தை தினமும் 400 கேள்விகளை கேட்கிறது. குழந்தை பேச தொடங்கிய வயதிலிருந்து 15 வயது வரை இது நடக்கிறது.

குழந்தைகள் எழுப்பும் கேள்விகளுக்கு பெரியவர்கள் பதிலளித்தால் அந்த பதிலிலிருந்து மேலும் பல கேள்விகளை எழுப்புவார்கள். எவ்வளவு அதிகமாக பதிலளிக்கப்படுகிறதோ அவ்வளவு அதிகமான கேள்விகள் குழந்தைகளிடமிருந்து வரும். அவ்வாறில்லாமல் ‘வாயை மூடிட்டு சும்மா இரு, அதெல்லாம் உனக்கு எதுக்கு’ என்று வாயை அடைத்தால் அதன் பிறகு கேள்வியே எழாது, குழந்தையின் அறிவும் விரிவடையாது.

Abilasha Soundarajan Familyபெரும்பாலான பெற்றோர்கள் வாயை அடைக்கும் வேலையை தான் செய்கிறார்கள். ஆனால் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியானது, பெற்றோர்களால் பதிலளிக்கப்படாத குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பதை ஓரளவுக்கு சாத்தியப்படுத்தியிருக்கிறது. எனவே பெற்றோர்கள் வாயை அடைத்தாலும் தொழில்நுட்பத்தை சார்ந்து குழந்தைகள் தமது அறிவை விரிவுபடுத்திக்கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறு அறிவை பெறுவதில் முதன்மையானது யூடியூப். யூடியூப் என்பது மிகப்பெரியகடல். அதில் காலை நனைக்காத குழந்தைகள் இருக்கவே முடியாது. யூடியூப் மூலம் குழந்தைகள் பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து கொள்கிறார்கள். அதே நேரத்தில் சரியான கண்காணிப்பும் வழிகாட்டலும் இல்லையெனில் தவறானவற்றை தெரிந்து கொள்வதற்கான சாத்தியமும் அதிகம்.

35,000 அதிகமான பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் வங்கி!.. விவரம் உள்ளே!…

யூடியூப் தவிர பல்வேறு செயலிகளை சுயமாக தர விறக்கி படங்களை வடிவமைப்பது, ஆடியோ, வீடியோக்களை எடிட்செய்வது என்பதெல்லாம் இன்றைய குழந்தைகள் மிகச்சாதாரணமாக செய்யக்கூடிய வேலைகளில் ஒன்றாகும்.

யூடியூப் தளத்திலேயே பல குழந்தைகள் சுயேச்சையாக சேனல்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சரியான வழிகாட்டலும் உதவியும் இருந்தால் விரும்பும் துறையில் அவர்களால் சிறப்பாக வளர முடியும்.

ஊரங்கு காலத்தில் பல குழந்தைகள் தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக முகநூலின் பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டி மின்னஞ்சல் அனுப்பிய தமிழகத்தை சேர்ந்த சிறுவனை பாராட்டியதுடன் 70,000 ரூபாய் பரிசையும் வழங்கியிருக்கிறது முகநூல் நிறுவனம்.

நாம் வாழும் இந்த தகவல் தொழில்நுட்பயுகத்தில் தமக்குப்பிடித்த துறைகளில் குழந்தைகள் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சென்னையை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி அபிலஷா சௌந்தரராஜன் உலகத்தின் மிக ஆபத்தான ஐந்து விலங்குகள் எவை எவை என்பதை பட்டியலிட்டு planet station என்கிற தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார்.

இது தான் அந்த மாணவி வெளியிட்டுள்ள முதல் காணொளி. ஆனால் பார்க்கும் போது அப்படித் தெரியவில்லை. வீடியோவிற்கான கண்டெண்டை தயாரித்ததுடன் அவரே பேசி, அவரே எடிட் செய்து வெளியிட்டிருக்கிறார். காணொளியின் யூடியூப் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

PLANET STATION

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here