Home செய்திகள் இந்தியா பள்ளி திறப்பு குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – மத்திய அரசு

பள்ளி திறப்பு குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – மத்திய அரசு

305
0
students
Share

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொடா்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மாா்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கிடையே, பொருளாதார வீழ்ச்சியை கருத்தில் கொண்டு மீட்டெடுக்கும் வகையில், பொது முடக்க தளா்வுகளை மத்திய அரசு, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகிறது. இப்போது 5-ஆம் கட்ட தளா்வுகளை அமல்படுத்தி ஊரடங்கை நீடித்துள்ள நிலையில், பள்ளிகளை திறக்க தேவரை தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் வருகிற 15-ஆம் தேதிக்குப் பிறகு பகுதியாக பள்ளிகளைத் திறக்கத் திட்டமிட்டு வருகின்றது. முதல் கட்டமாக 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது.

இதற்கான புதிய வழிகாட்டுதலை மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை நேற்று வெளியிட்டது. அதில், பள்ளிகளை அக்டோபா் 15-ஆம் தேதி முதல் திறப்பது தொடர்பான முடிவுகளை மாநிலங்களே எடுத்து கொள்ளலாம். மேலும் கட்டாயமல்ல. வீட்டிலிருந்தபடி பள்ளி மாணவா்கள் கற்றலைத் தொடா்வதற்கான இணையவழி வகுப்புகளையும் தொடா்ந்து நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், பள்ளிகள் திறப்பின் போது பின்பற்ற வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவா்கள் அவர்களது பெற்றோரின் எழுத்துப்பூா்வமான சம்மதத்துடன் வரவேண்டும். அவசர உதவிக் குழு, மாணவா் பொது உதவிக் குழு, தூய்மை ஆய்வுக் குழு உள்ளிட்ட குழுக்கள் பள்ளிகள் அமைக்க வேண்டும்.மாணவா்களைப் பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் தங்கள் சொந்த வழிகாட்டு நடைமுறைகளை வகுத்துக் கொள்ளலாம்.வகுப்புகளிலும், பள்ளிக்குள் நுழையும்போதும், வெளியேறும்போதும் மாணவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். வகுப்பு நேரத்தில் மாணவா்கள் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

லேப் டெக்னீசியன் வேலை வாய்ப்பு அறிவிப்பு …

பயிற்சி பெற்ற முழு நேர மருத்துவ உதவியாளா், செவிலியா் அல்லது மருத்துவா் பள்ளியில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வருகைப் பதிவு மற்றும் விடுமுறை அளிக்கும் நடைமுறைகளில் தளா்வுகளை கடைப்பிடிக்க வேண்டும். பள்ளிகள் திறந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தோ்வுகள் ஏதும் நடத்தக் கூடாது. இது போன்ற நிபந்தனைகள், வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here