Home செய்திகள் இந்தியா தயாரான விக்ரகா ரோந்து கப்பல்: இந்திய கடலோர காவல்படைக்கு ஒப்படைப்பு!…

தயாரான விக்ரகா ரோந்து கப்பல்: இந்திய கடலோர காவல்படைக்கு ஒப்படைப்பு!…

512
0
vigraha coast guardship
Share

காட்டுப்பள்ளி தனியார் கப்பல் கட்டும் துறைமுகத்தில் கட்டப்பட்ட விக்ரகா 45007 ரோந்து கப்பல் இந்திய கடலோர காவல்படைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி எல்என்டி தனியார் கப்பல் கட்டும் துறைமுகத்தில் இன்று இந்திய கடலோர காவல் படைக்கு, ஐசிஜிஎஸ் விக்ரகா 45007 பாதுகாப்பு கப்பல் புதிதாக கட்டப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளனர். இதில் நிதி அமைச்சக செயலாளர் சோமநாதன், கடலோர காவல் படை அதிகாரி நடராஜனன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பூஜைகள் நடத்தி மூவர்ண பலூனை பறக்கவிட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளனர். இந்த கப்பலானது 25 ஆண்டுகள் திறம்பட செயல்படும் வகையில் அல்ட்ரா மாடல் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாரத் பெட்ரோலியத்தின் முதலீடு செய்வதில் புதிய சிக்கல் ! வெளிநாட்டு நிறுவனங்கள் அச்சம்…

இதில் கப்பல் மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் 102 பேர் கப்பலில் பணியாற்ற உள்ளனர். இதன் நீளம் 98 மீட்டர் அகலம் 14.8 மீட்டர். இதன் மொத்த எடை 2, 100 டன் எடை கொண்ட 5000 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. நான்கு அதிநவீன துப்பாக்கி சுடும் வசதிகள் கொண்ட கப்பலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு எஞ்சின்கள் கொண்ட, ஹெலிகாப்டர் நிறுத்தும் வசதி கொண்ட கப்பலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலோர பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here