Home செய்திகள் இந்தியா சர்வதேச செஸ் போட்டி : தமிழக சிறுவன் அரையிறுதிக்கு முன்னேற்றம் ! முதல்வர் வாழ்த்து…

சர்வதேச செஸ் போட்டி : தமிழக சிறுவன் அரையிறுதிக்கு முன்னேற்றம் ! முதல்வர் வாழ்த்து…

526
0
Share

சர்வதேச செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதற்காகப் பல பிரபலங்களும், தமிழக முதல்வரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சர்வதேச செஸ் கூட்டாண்மை சார்பில் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 வரை செஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் பல்வேறு தரப்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகின்றனர். இந்தியாவின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்னா நந்தா என்ற சிறுவன் இந்த போட்டியில் கலந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இது இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

லாவாவின் புதிய கீபேட் மொபைல் : இதயத்துடிப்பு ரத்த அழுத்தம் போன்றவற்றையும் பரிசோதனை செய்யுமாம்..

இதற்காக பல்வேறு விளையாட்டு வீரர்களும், பிரபலங்களும், வாழ்த்து தெரிவித்தனர். தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி. கே. பழனிசாமியும் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்னா நந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் பதிவிட்டுள்ளார்.


அவர் குறிப்பிட்டுள்ள ட்வீட் பதிவானது. கிராண்ட் மாஸ்டர் பிரக்னா நந்தா அவர்கள் அரையிறுதிச் சுற்று மட்டுமல்லாமல் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று தமிழகத்திற்குப் பெருமை தேடித்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here