Home செய்திகள் இந்தியா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து ! ஆல் பாஸ் அறிவித்த மாநில அரசு…

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து ! ஆல் பாஸ் அறிவித்த மாநில அரசு…

378
0
students
Share

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த  நாடு முழுவதும் ஊரடங்கு 5 கட்டமாக அமலில் உள்ளது. அதனையடுத்து ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் நிலையைக் கருத்தில் கொண்டு தளர்வுகள் அளித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து ஏராளமான பொருளாதார நடவடிக்கை தொடர்பாக பல்வேறு தளர்வுகள் மத்திய அரசும், மாநில அரசும் அளித்தன. அதே போல் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள் தமிழகத்தில் நிலவி வருகிறது.
10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் என்பது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. எனவே தமிழகத்தில் வரும் ஜூன் 15 -ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஆனால் உயர்நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தும் இருந்தது.
இந்த வழக்கு வரும் ஜூன் 11 -ம் தேதி மறுவிசாரணை நடத்தப்படவுள்ளது. மற்ற மாநிலங்கள் பொறுத்த வரை ஒரு சில  மாநிலங்கள் தேர்வு முடித்து விட்டன. மற்ற சிலவை ஆலோசித்துக் கொண்டுள்ளது.telungana cm
தற்போது தெலுங்கானா மாநிலம் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்துள்ளதாக அறிவித்தது. அதோடு மட்டுமல்லாமல் அனைவரும் ஆல் – பாஸ் எனவும் அறிவித்துள்ளது. இன்டெர்னல் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கிரேடு போடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்

இந்த முடிவை அமைச்சர்கள், கல்வியாளர்கள் என அனைவருடனும் ஆலோசித்த பிறகே முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த முடிவிற்குச் சம்மதம் தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 6 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத இருந்தனர். மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here