Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் பிரட் உடலுக்கு நல்லதா,கெட்டதா ? அதிர்ச்சி தகவல்..

பிரட் உடலுக்கு நல்லதா,கெட்டதா ? அதிர்ச்சி தகவல்..

375
0
bread
Share

இன்றைய உலகத்தில் அனைத்து இல்லங்களிலும் பிரட் என்பது இன்றியமையாத ஒன்றாகி விடுகிறது. ஏனென்றால் காலை உணவாக பிரட் ரோஸ்ட், பிரட் ஆம்ப்லேட், பிரட் ஜாம் என அனைத்தும் வகையிலும் பிரட் என்பது நம் வாழ்க்கையில் இணைந்து வருகிறது. அதிலும் நோயாளிகளுக்கு இந்த பிரட் தான் முக்கிய உணவாகிறது. இப்படி இருக்க இதனை உண்பதால் நம் உடலிற்குத் தீங்கு ஏற்படுமா என்பது பல்வேறது சந்தேகமாக உள்ளது. இது குறித்துத் தான் இந்த பதிவு.

இந்த பிரட் முதன் முதலில் எகிப்தியர்கள்தான் உணவாகப் பயன்படுத்தியுள்ளனர். அப்போது ஆரோக்கியம் அதிகத்துடன் தயாரிக்கப்பட்டது. ஆனால் இப்போது கார்போஹைட்ரேட் அதிகம் சேர்ப்பதால் கொழுப்பு உடலில் அதிகரிக்கிறது. இதனால் ஜிம்ற்கு செல்வோர், டையட் கடைப்பிடிப்போர் முக்கியமாகத் தவிர்ப்பது இந்த பிரெட் தான்.

மேலும் பிரட் கெட்டுப்போகாமல் இருக்கவும் நீண்ட நாட்களுக்குப் பதப்படுத்தி வைக்கவும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் சில பொருட்கள் சேர்க்கப்படுகிறது, உப்பு, சர்க்கரை போன்றவை அளவிற்கு அதிகம் சேர்ப்பதால் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதாகக் கருதுகின்றனர்.

இந்த பிரட்டில் கார்போஹைட்ரேட் ஏராளமான இருப்பதால் செரிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் இதனால் செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கருதுகின்றனர். அதே போல் தானிய வகைகளான கோதுமை, ராகி போன்றவற்றினால் தயாரிக்கப்பட்ட பிரட்டுகளில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், இரும்புச் சத்து போன்ற உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆனால் வெள்ளையாக இருக்கும் பிரட்டுகள் இது போன்ற எதுவுமே இல்லை என்பதே உண்மை.

சிலருக்குத் தானிய வகை ஒவ்வாமை இருந்தால் இந்த பிரெட் உண்ணுபதைத் தவிர்க்க வேண்டும். எனவே பிரெட் என்பதும் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

மருத்துவர்கள் உடல்நிலை சரியில்லாத போது உடலுக்குத் தேவையான ஆற்றலுக்கு கார்போஹைட்ரேட் நிச்சயம் உதவும் என்பதால் தான் பரிந்துரைக்கிறார்களே தவிர வேறு எந்த சத்துக்களுமில்லை என்கிறார்கள்.

தானிய வகையால் தயாரிக்கப்பட்ட பிரெட் வேண்டுமானால் நோயாளிகளுக்குத் தரலாம். ஆனால் அலர்ஜி இருந்தால் தயவு செய்து தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here