Home அறிவியல் ஸ்மார்ட் வகுப்பறைகள் வாயிலாக மாணவர்களின் கல்வி தரத்தை உயர்தியதற்காக ”குளோபல் ஸ்மார்ட் சிட்டிஸ் போரம்” சார்பில்...

ஸ்மார்ட் வகுப்பறைகள் வாயிலாக மாணவர்களின் கல்வி தரத்தை உயர்தியதற்காக ”குளோபல் ஸ்மார்ட் சிட்டிஸ் போரம்” சார்பில் சென்னை மாநகராட்சிக்கு விருது.

446
0
Share

சென்னை மாநகரட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1 கோடியே 75 லட்சம் செலவில் 28 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்ததோடு மட்டுமல்லாது மாணவர்களின் வருகைபதிவு, கல்வியின் மீதான ஆர்வம், தேர்ச்சி  சதவீதம் ஆகியவை அதிகரிதுள்ளது. இத்திட்டதை திறம்பட செயல்படுதியதற்காக சென்னை மாநகராட்சிக்கு குளோபல் ஸ்மார்ட் சிட்டிஸ் சார்பில் கடந்த 15 ஆம் தேதி புது டெல்லியில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நாகாலாந்து அரசின் உயர் கல்வி, தொழில்நுட்பக் கல்வி மற்றும் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் டெம்ஜென் இம்னா அலாங் வழங்க, மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) எம்.கோவிந்தராவ் பெற்றுக் கொண்டார். விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் அ.சு.முருகன், உதவி கல்வி அலுவலர் டி.நளினகுமாரி ஆகி யோர் கலந்துகொண்டனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here