Home அறிவியல் நிலவின் தரையிலிறங்கி ஆராய இஸ்ரோ புதிய முயற்சி! – சந்திராயன் – 3 தயார்!

நிலவின் தரையிலிறங்கி ஆராய இஸ்ரோ புதிய முயற்சி! – சந்திராயன் – 3 தயார்!

651
0
Share

ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திராயன் -2 தோல்வியடைந்த நிலையில், புதிதாக சந்திரயான் – 3  வடிவமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு, கேரள மாநிலம் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண் வெளி ஆய்வு மையத்தின் இயக்குநர் எஸ்.சோம்நாத் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

2500 ஆண்டுகளுக்கு முன்பே அதிநவீன அறிவியல் – கீழடி பற்றி அழகப்பா பல்கலை ஆய்வு

இந்தக் குழுவினர், சந்திரயான்-3 லேண்டர், ரோவர், நிலவில் தரை யிறங்கி ஆய்வு செய்வதற்குரிய நடைமுறைகள் மற்றும் அனைத்து அம்சங்கள் குறித்தும் அறிக்கை தயாரித்துக் கொடுப்பார்கள். இந்த அறிக்கை கிடைத்தவுடன் சந்திரயான்-3 தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கிவிடும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், சந்திரயான்-2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி தரையிறக்காமல் போனதற்கான காரணங்களை ஆராய கல்வியாளர்கள், இஸ்ரோ நிபுணர்கள் அடங்கிய தேசிய உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here