Home அறிவியல் காற்று மாசுபடுகிறதா? – அரசு விளக்கம்

காற்று மாசுபடுகிறதா? – அரசு விளக்கம்

344
0
Share

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னை நோக்கி காரில் வரும்போது  திருச்சி அருகில்   சாலையெங்கும் ஒரே புகைமூட்டம். வண்டி ஓட்ட முடியவில்லை.

மேகம் தரையிறங்கியதா? என்றால் அதுவுமில்லை. அதேவேளையில் சென்னையிலும் புகைமூட்டம். கொடைக்கானல் ஊட்டி மாதிரி. ஆனால் குளிரில்லை.

இந்தப் புகைமூட்டம் குறித்து பலரும் பலவிதமாக பேச ஆரம்பித்துவிட்டனர். வடமாநிலங்களில் விவசாய நிலத்தை எரிப்பதால் உண்டான புகை இங்கும் வந்துவிட்டது என்ற செய்திகள் பரவின. காற்று மாசு பட்டதால் புகைமூட்டம் உருவாயின என்றெல்லாம் கருத்துக்கள் உருவாயின.

இந்நிலையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை எழிலகத்தில் இன்று இவ்வாறு விளக்கமளித்துள்ளார்., “காற்று மாசுபடுவதற்கு வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை மற்றும் கட்டிட வேலைகளின்போது வெளிப்படும் தூசு உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன. எனினும் ஒருவார காலமாகக் காற்றழுத்தத் தாழ்வு நிலை இருப்பதாலும், சூரியக் கதிர்கள் முழுமையாக இறங்காததாலும், கடல் காற்று ஈரப்பதத்துடன் செல்லாததாலும் மாசு தங்கிவிட்டது. 2-3 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்த நிலை இப்போது படிப்படியாக மாறி வருகிறது. சென்னையில்  மோசமான நிலை இல்லை. ஒரு சில இடங்களில் காற்று மாசு பதிவாகியுள்ளது. அது மிகைப்படுத்தி சொல்லப்பட்டிருக்கலாம். ஆயினும், 1-2 இடங்களில் மோசமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, சிறப்பாக இருக்கும்  புள்ளிவிவரங்களும் கிடைத்திருக்கின்றன.  காற்று மாசு தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து மக்கள் பயப்பட வேண்டாம்”.

இவ்விளக்கக் கூட்டத்தில், வேளாண் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here