Home செய்திகள் இந்தியா ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்பவரா ! அவசியம் கவனம் தேவை…

ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்பவரா ! அவசியம் கவனம் தேவை…

686
0
hacker
Computer hacker or Cyber attack concept background
Share

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஐடி நிறுவனங்கள், வங்கி, ஊடகம் உள்ளிட்ட பலதுறையை சார்ந்தவர்கள்   தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே கம்ப்யூட்டர் மூலம் வேலை செய்து வருகின்றனர். இதற்காகவே அந்தந்த நிறுவனங்களின் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் போன்றவற்றை தங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து வேலை செய்கின்றனர்.corona hack

ஆனால் தற்போது அவர்களது கம்ப்யூட்டரில் இணையத் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக புகார் வருகிறது. பல்வேறு இடங்களிலிருந்து ஹேக்கர்கள் உன்னிப்பாக கவனித்து கம்ப்யூட்டரில் உள்ள பல்வேறு தகவல்களை திருடுவது, அழிப்பது போன்ற சைபர் அட்டாக் அதிகரித்துள்ளது என்கிறார்கள் மென்பொருள் வல்லுநர்கள்.

அதிலும் கொரோனா பாதிப்பு, தடுப்பு என்று பொதுமக்களின் கவனத்தை பெருமளவில் ஈர்க்கக்கூடிய பெயரில் ஏராளமான மெயில்கள் வருவதாக கூறுகின்றனர். இவ்வாறு வரும் மெயிலை பார்க்கும் போது அதனுடன் வரும் இணைப்புகள் எதையும் உள்ளே சென்று பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.mail hack

மெயிலுடன் உடன் வரும் இணைப்புகளை திறந்துவிட்டால் உடனடியாக கம்ப்யூட்டரில் வைரஸ் ஏற்பட்டு பல்வேறு தகவல்களை திருட வாய்ப்பு உள்ளது என்கின்றனர். அலுவலகத்தில் பணிபுரியும் போது தொழில்நுட்ப பொறியாளர்கள் அதற்கு தேவையான பாதுகாப்பு, அப்டேட் மற்றும் வைரஸ் எதிர்ப்பு உள்ளிட்ட ஏராளமான முறைகளை கையாள்வார்கள்.

SWIGGY , ZOMATO டெலிவரி பாய்ஸ் உடலின் வெப்பநிலை ! வாடிக்கையாளர்களின் நலன் கருதி புதிய அப்டேட்…

வீட்டிலிருந்து பணிபுரியும் போது போதுமான பாதுகாப்பு  வசதிகள் இல்லை. எனவே இணைய தாக்குதல்கள் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கம்ப்யூட்டரில் வரும் வைரஸ் தாக்குதல்கள் உங்கள் அலுவலகத்தில் உள்ள மற்ற கம்ப்யூட்டர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகையால் தேவையான வைரஸ் தடுப்பு அப்ளிகேஷன் மற்றும் அப்டேட்டை வைத்துக்கொண்டால் இது போன்ற ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று நிபுணர்கள்  அறிவுரை அளித்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here