Home செய்திகள் இந்தியா டாஸ்மாக் மீண்டும் திறக்கப்படுமா ? தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு : மது பிரியர்கள் குமுறல் !

டாஸ்மாக் மீண்டும் திறக்கப்படுமா ? தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு : மது பிரியர்கள் குமுறல் !

436
0
Share

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் கொரோனா பாதிப்பினால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மாநிலம் முழுவதும் மதுபானக்கடைகள் நேற்று முன்தினம் (மே 7) திறக்கப்பட்டது.Tasmac
இந்த இரண்டு தினங்களுமே டாஸ்மாக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம், பல கி.மீ தூரம் வரை வரிசையில் வந்து மதுபிரியர்கள் வாங்கி சென்றனர். இதில் போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கியபோது உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் ஏதும் பின்பற்றப்படவில்லை.
இந்த கூட்டத்தை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் ஒரு சில கடைகளில் போலீசார் திணறினர். முதல் நாளை விட இரண்டாம் நாள் கூட்டம் அதிகமாகிப் போனது. ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களின் வசூலைக்  காட்டிலும் தமிழகத்தின் மது விற்பனை சாதனை படைத்தது .
குறிப்பு : இந்த இரண்டு நாட்களில் 297 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.
இப்போது மதுக்கடைகள் திறக்கக் கூடாது என்று பொதுநல வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் போடப்பட்டு அதனை விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றம் அறிவித்த எந்த ஒருtasmac closed கட்டுப்பாடுகளையும் பின்பற்றவில்லை, எனவே ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மூட வேண்டும். மேலும் அரசு விரும்பினால் ஆன்லைனில் டோர் டெலிவரி செய்யலாம். இவ்வழக்கு வரும் 14ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.  அந்த மனுவில் கூறியிருப்பதாவது :
உயர்நீதிமன்றம் அறிவித்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் தான் சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை. எனவே தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடச் சொல்லி இருப்பது ஏற்புடையதல்ல இந்தியா முழுவதும் ஊரடங்கின் போது மது விற்பனை செய்யும் போது  தமிழகத்தில் விற்கக் கூடாது என்று சொல்வது தவறு. எனவே மதுக்கடைகளைத் திறக்க அனுமதியளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மே 14-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்று தான் தமிழ் நாட்டில் டாஸ்மாக் திறக்கப்படுமா? இல்லையா? எனத் தெரியவரும்.
இதனால் மது பிரியர்கள் மீண்டும் டாஸ்மாக் திறப்பார்களா, இல்லையா என ஏங்கி தவிக்கின்றனர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here