Home செய்திகள் இந்தியா பேப்பர் பாட்டில் விஸ்கி ! சமூக அக்கறையுடன் இந்த முடிவை எடுத்துள்ளதா ?

பேப்பர் பாட்டில் விஸ்கி ! சமூக அக்கறையுடன் இந்த முடிவை எடுத்துள்ளதா ?

339
0
whisky
Share

உலகப் புகழ்பெற்ற ஜானி வாக்கர் நிறுவனத்தின் விஸ்கி ஆனது இனிமேல் பேப்பர் பாட்டிலில் தான் வெளிவர உள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது சுற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டு நம்முடைய மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

உலக அளவில்200 ஆண்டுகள்  புகழ் பெற்ற ஜானி வாக்கர் விஸ்கி தயாரிப்பு உரிமமானது தற்போது உலகின் மிகப்பெரிய மதுபான விற்பனை நிறுவனமான டியாஜியோ நிறுவனத்தின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ளது.

தற்போது இந்த நிறுவனம் புவி சூழலியலுக்குச் சாதகமாக புது முயற்சியை அடுத்த ஆண்டிலிருந்து சோதனை செய்ய  முடிவு செய்துள்ளது. ஜானி வாக்கர் விஸ்கிகள் பெரிதும் கண்ணாடி பாட்டில்களில் தான் கிடைக்கின்றது, ஆனால் அந்த நிறுவனத்தின் பிற பிராண்டுகளில் ப்ளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க பல்வேறு வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே போன்று கண்ணாடி பாட்டிகளில் அதிகளவு கரியமில வாயு வெளியேற்றம் தான் முக்கிய பங்காற்றுகிறது. இதனால் பேப்பர் பாட்டில்களைத் தயாரிக்க பல்பெக்ஸ் எனும் தன் துணை நிறுவனத்தை டியாஜியோ ஆரம்பிக்க உள்ளது. இந்த  நிறுவனம் யுனிலீவர் மற்றும் பெப்ஸிகோ நிறுவனத்துக்குத் தேவையான பாட்டில்களையும் தயாரிக்கும் என்று தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here