Home செய்திகள் இந்தியா அத்தியாவசிய தேவை நிறுவனங்களுக்கான வாகன பாஸ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

அத்தியாவசிய தேவை நிறுவனங்களுக்கான வாகன பாஸ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

487
0
Share

அத்தியாவசிய தேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு அனுமதிச் சீட்டு பெறப் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு  இணையதளத்தில் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை :
“கொரோனா நோய்த் பரவலைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகள் சார்ந்த நிறுவனங்கள் தவிரப் பிற நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்கள்  செயல்படுவதற்கு ஏற்றவாறு அவற்றின் பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்திற்காகத் தமிழக அரசு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் அரசாணை எண் 152 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்குப் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அனுமதி அட்டைகள் வழங்கப்படுகிறது.
இதுவரை 652 நிறுவனங்களுக்கு மாநகராட்சி சார்பில் அனுமதி அட்டை தரப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நலன் கருதி அனுமதி அட்டை பெறுவதற்குப் பெருநகர சென்னை மாநகராட்சி http://covid19.chennaicorporation.gov.in/c19/ இணையதள வழியே விண்ணப்பிக்கலாம்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவுச் சான்றிதழ் நகல், பணியாளர் அடையாள அட்டை நகல், வாகனப் பதிவுச் சான்றிதழ் நகல் மற்றும் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரின் கையெழுத்துடன் கூடிய கடிதம் ஆகியவற்றுடன் காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் .
எனவே நிறுவனங்கள் அனுமதிச் சீட்டு பெறச் சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை  இணையதளத்திலேயே விண்ணப்பத்தைப் பெற்றுக்  கொள்ளலாம்.
தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு இணையதளம் மூலம் அனுமதிச் சீட்டு வழங்கப்படும். பார் கோடு கொண்ட அனுமதிச் சீட்டுகளை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here