Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் காய்கறி சந்தையா நீச்சல் குளமா ? திருமழிசை சந்தையின் நிலை…

காய்கறி சந்தையா நீச்சல் குளமா ? திருமழிசை சந்தையின் நிலை…

520
0
thirumazhisai
Share

கொரோனா  பரவல் காரணமாகச் சென்னை கோயம்பேடு மார்க்கெட் தற்காலிகமாகச் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக திருமழிசையில் தற்காலிக மார்க்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அங்கு ஒரு நாளைக்கு 5 டன்கள் வரை காய்கறிகள், பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
thirumazhisaiபருவமழை காலம் தொடங்கியதால் சில தினங்களாக இரவில் மழை பெய்து வருகிறது. இதனால் திருமலிசை மார்க்கெட் முழுவதும் நீர் தேங்கியுள்ளது. இதில் எப்படி காய்கறிகள் இறக்குமதி செய்து விற்பனை செய்வது என்று புரியாமல் வியாபாரிகள் திணறி வருகின்றனர்.
இந்த இரண்டு நாள் மழைக்கே இவ்வளவு நீர் தேங்கித் தாக்குப் பிடிக்கவில்லை என்றால் இன்னும் என்னவாகுமோ என்று வியாபாரிகள் புலம்பி வருகின்றனர். மேலும் மாநகராட்சி இதற்குத் தக்க நடவடிக்கை எடுத்துச் சரி செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
அப்படியே தண்ணீர் வெளியேறினாலும் இடம் முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் நோய்கள் பரவும் என்ற அச்சத்தில் வியாபாரிகள் பொது மக்களும் உள்ளனர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here