Home செய்திகள் உலகம் பிரேசில் நாட்டு அதிபர் மீது அபராதம் போட்ட நீதிபதி…

பிரேசில் நாட்டு அதிபர் மீது அபராதம் போட்ட நீதிபதி…

338
0
pm brazil
Share

பிரேசில் அதிபர் போல்சொனாரோ எங்குச் சென்றாலும் முகக்கவசம் அணிவதில்லை. எனவே அந்நாட்டு நீதிபதி போல்சொனாரோ முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்றால் ஒரு நாளைக்கு 387 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முழுதும் பேராபத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்  இதுவரை 94 லட்சம் பேரைத் தாக்கியுள்ளது. அதில் 4.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பிரேசில் 2வது இடத்தில் உள்ளது. ஏனென்றால் பிரேசிலில் இந்த கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடியது.
இதுவரை 11.5 லட்சம் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்துள்ளனர். இங்கும் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது பல்வேறு காரணம் கருதித் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரேசில் அதிபர் மீது கொரோனாவை கட்டுப்படுத்த தவறியவர் என்று ஏராளமான சர்ச்சைகள் இருந்தது. தற்போது சமூக விலகல் தேவையில்லை,  முகக்கவசம் அணிய தேவையில்லை, அவரவர் விருப்பப்படி இருந்து கொள்ளலாம் என்று ஒரு பிரச்சாரத்தை வெளியிட்டு மிகுந்த சர்ச்சைக்கு  ஆளாகியுள்ளார். அது மட்டுமின்றி அவரும் எங்குச் சென்றாலும் முகக்கவசம் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு அந்நாட்டு நீதிபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டுப் பொதுமக்களிடம் பேசும்போதும், முக்கியமான கூட்டங்களில் பேசும்போதும் அதிபர் போல்சொனாரோ
முகக்கவசம் அணிவதில்லை.
இது குறித்து நீதிபதி தெரிவித்திருப்பது : அதிபர் போல்சொனாரோ பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தவிர்க்க முடியாதது இருப்பினும் அவருடைய உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். எனவே எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் கொரோனா தாக்கம் ஏற்படாமல் இருக்க அவர் முகக்கவசம் மற்றும் தகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.brazil
ஏனெனில் அவர் கொரோனா தாக்கத்திற்கு ஆளாகிவிட்டால் பெரும் குழப்பம் ஏற்பட்டு விடும். எனவே அவர் தலைநகரை விட்டு எந்த ஒரு நிகழ்ச்சிக்கும், பொதுக்கூட்டத்திற்குக் கலந்து கொண்டால் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் தவறும் ஒவ்வொரு நாளுக்கும்  387 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.29,278) அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். நாட்டு அதிபர் பதவியில் இருக்கும் போதே அவருக்கு உத்தரவிட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here