Home செய்திகள் இந்தியா பல்கலைக்கழகங்கள் விரும்பினால் முதலாமாண்டு இரண்டாமாண்டு தேர்வை நடத்தலாம் – உச்ச நீதிமன்றம்

பல்கலைக்கழகங்கள் விரும்பினால் முதலாமாண்டு இரண்டாமாண்டு தேர்வை நடத்தலாம் – உச்ச நீதிமன்றம்

312
0
high court
Share

கொரோனா பரவல் காரணமாகத் தமிழ்நாட்டில் இறுதி ஆண்டுத்தேர்வை தவிர அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதாகத் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அது மட்டுமில்லாமல் அரியர் தேர்வுகளுக்குப் பணம் செலுத்தியிருந்தால் அந்த தேர்வுகளும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதற்கு உச்சநீதிமன்றமும் தேர்வை நடத்த உத்தரவு அளித்தது. அதுமட்டுமில்லாமல் இறுதி ஆண்டு தேர்வு எழுதாமல் பட்டம் வழங்க முடியாது என்றும் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து 30-ஆம் தேதிக்குள் தேர்வை நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.Arts and Science Collegelatest

இத்தகைய சூழலில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் முதலாமாண்டு இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வு நடத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மனிதர்களின் மூளையின் செயல்பாட்டைக் கண்டறியும் புதிய கருவி – ஐஐடி.

மேலும் முதலாமாண்டு இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பு தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே யுஜிசி முடிவிற்கேற்ப முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப் படுமா இல்லையா என விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here