Home அறிவியல் மனிதர்களின் மூளையின் செயல்பாட்டைக் கண்டறியும் புதிய கருவி – ஐஐடி..

மனிதர்களின் மூளையின் செயல்பாட்டைக் கண்டறியும் புதிய கருவி – ஐஐடி..

390
0
IIT
Share

இந்தியாவின் முதல் கல்வி நிறுவனமாக சிறந்து விளங்கும் ஐஐடி பேராசிரியர்களைக் கொண்டு குழு அமைத்து மனிதர்களின் மூளை செயல்பாட்டைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில் சென்னை ஐஐடியின் கெமிக்கல் இன்ஜினியரிங் துறைத் தலைவராக இருப்பவர், பேராசிரியர் ராஜகோபாலன் ஸ்ரீனிவாசன். இவரது தலைமையில், பேராசிரியர்கள் முஹம்மது உமர் இக்பால், பாப்ஜி ஸ்ரீனிவாசன் ஆகியோரது குழு நடத்திய ஆராய்ச்சியில், மனிதர்களின் மூளை செயல்பாடுகளை ஸ்கேன் செய்து கண்டறியும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மனதளவில் எந்தவித அழுத்தத்தையும் கொண்டு பணிபுரியக் கூடாது. அது மட்டுமில்லாமல் அவ்வாறு பணிபுரிவதால் வேலையில் ஏற்படும் பாதிப்புகளையும், விபத்துகளையும் தவிர்க்க இது போன்ற கருவி பயன்படும் என்று ஐஐடி ஆராய்ச்சி குழு நம்புகின்றனர்.

பவுலிங் ஜாம்பவான் மலிங்கா ஐபிஎல் தொடரிலிருந்து விலகல் !

இந்தக் கருவியைத் தொழிலாளர்கள் தலையில் பொருத்தி ஸ்கேன் செய்யும் போது மூளையின் அலைகளை ஆய்வு செய்து அதிக அழுத்தத்துடன் வேலை செய்யும் தொழிலாளர்களைக் கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here