Home செய்திகள் இந்தியா வரிசையாக டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுகிறது ! ஒபாமா பில்கேட்ஸ் போன்ற முக்கிய பிரபலங்களுடையதும் ஹேக்...

வரிசையாக டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுகிறது ! ஒபாமா பில்கேட்ஸ் போன்ற முக்கிய பிரபலங்களுடையதும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

329
0
twitter
Share

உலக அளவில் வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பத்தில் இணையப் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அதற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் ஹாக்கிங் என்ற அபாயம் உள்ளது. ஏனென்றால் இணைய வழித் தாக்குதல்களை இந்த ஹேக்கிங் வாயிலாக சில நபர்கள் தகவல் திருடுவது இது நாள் வரை நடந்து வருகிறது.

ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கணக்குகளையும், தகவல்களையும் இந்த ஹேக்கர்கள் ஊடுருவி அவர் அனுமதியின்றி எடுத்து விடுகின்றனர். தற்போது இது போன்று சம்பவம் உலக அளவில் பிரபலமான அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பில்கேட்ஸ், எலான் மஸ்க், கேன் வெஸ்ட், கிம் கர்டாஷின் வெஸ்ட், ஜெப் பெசோஸ், மைக் ப்ளூம்பெர்க் ஆகியோரது டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

அது எவ்வாறு ஹக் செய்யப்பட்டுள்ளது என்றால் இவர்களது டிவிட்டர் கணக்கிலிருந்து பிட்காயினுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்று பதிவிடப்பட்டுள்ளது. அதற்கு பில்கேட்ஸ் கணத்திலிருந்து ரீரீடிவீட் செய்வது போன்ற செய்துள்ளனர்.bill gates

இதேபோல் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா அவர்களது ட்விட்டர் கணக்கில் இருந்து இந்த கொரோனா தாக்குதலுக்கு எம் சமூகத்தினருக்கு என்னுடைய அனைத்து பிட் காயின்களையும் இரட்டிப்பாகத் திரும்ப அளிக்கப் போகிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவும் ஹேக்கர்கள் மூலம் செய்யப்பட்டது.

இது குறித்து விவரம் அளிக்க வேண்டும் என்று டிவிட்டர் நிர்வாகத்திற்குக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு டிவிட்டர் நிர்வாகம் தரப்பிலிருந்து இந்த பிரச்சனைக்கு நாங்கள் விரைவில் தீர்வு கண்டு அளிப்போ அது மட்டுமின்றி இதுபோன்று அடுத்து வராமல் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம். இது தொடர்பாக விளக்கம் அளிப்போம் என்றும் டிவிட்டர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here