Home செய்திகள் இந்தியா ஜியோ & கூகுள் ஒப்பந்தத்தால் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயனடைவார்கள் என்று கூறிய சுந்தர் பிச்சை!…

ஜியோ & கூகுள் ஒப்பந்தத்தால் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயனடைவார்கள் என்று கூறிய சுந்தர் பிச்சை!…

390
0
sundar pichai mukesh ambani
Share

எண்ணெய், தொலைதொடர்புத்துறை, சில்லறை வர்த்தகத் துறைகளில் முன்னணி நிறுவனமாக உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் மெய்நிகர் (virtual) தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, கொரோனா காலத்திற்குப் பின்னர் இந்தியாவின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

பேஸ்புக் உள்ளிட்ட மிக முக்கிய நிறுவனங்கள் ஜியோவில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிலையில், கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்து, 7.7 சதவிகித பங்குகளை வாங்க இருப்பதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

கூகுள் மற்றும் ஜியோ இணைந்து குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் தயாரிக்க உள்ளதாக முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். இந்தியாவில் இருந்து 2ஜி சேவையை முற்றிலும் நீக்கி, புதிய தொழில்நுட்பத்தை அனைவருக்கும் வழங்குவோம் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது வரை 100 மில்லியன் ஜியோ போன்கள் விற்கப்பட்டுள்ளன. கூகுள் மற்றும் ஜியோ இணைந்து புதிய வலிமை மிக்க ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் ஆபரேடிங் சிஸ்டத்தை தயாரிக்க உள்ளது என்றும் முகேஷ் அம்பானி கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஜியோ நிறுவனத்துடன் இணைந்திருப்பது மிகவும் பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இணையதளம் என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் எனவும், ஜியோ உடனான ஒப்பந்தத்தின் மூலம், லட்சக்கணக்கான இந்தியர்கள் ஸ்மார்ட்போன் சேவையை பயன்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here