Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் கோயம்பேடுக்குப் பதில் திருமழிசை ! இன்று முதல் வியாபாரிகளுக்குக் காய்கறி விற்பனை தொடக்கம்..

கோயம்பேடுக்குப் பதில் திருமழிசை ! இன்று முதல் வியாபாரிகளுக்குக் காய்கறி விற்பனை தொடக்கம்..

486
0
market news
Share

தமிழகத்தில் கொரோனா பரவலின் கோட்டையாகச் செயல்பட்ட சென்னை கோயம்பேடு மார்க்கெட்  தற்காலிகமாக   மூடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாகச் சென்னை அருகிலுள்ள திருமழிசையில் தற்போது காய்கறி மார்க்கெட் அமைக்க முடிவெடுத்தது.
Marketஇதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் திருமழிசை தற்காலிக காய்கறி மார்கெட்டில் விற்பனை தொடங்கியது. ஏற்கனவே காய்கறி விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடுகள் ஏற்பட்ட நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதலே வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். ஒவ்வொருவரின் உடல் வெப்ப நிலையும் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே இந்த சந்தைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். திறந்த முதல் நாளான இன்றே காய்கறிகள் விலை குறைவாகக் கிடைக்கிறது. இன்று 5000 ஆயிரம் டன் காய்கறிகள் வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று காவல்துறை தொடர்ந்து ஒலிபெருக்கியில்  அறிவித்துகொண்டுருந்தது. மொத்த வியாபாரிகளைத் தவிரப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இன்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகள் விலை நிலவரம்:
வெங்காயம் -14 ரூ
தக்காளி -15 ரூ
முள்ளங்கி -20 ரூ
வெண்டை-25 ரூ
கத்திரிக்காய் -25
உருளைக் கிழங்கு -28 ரூ
பொடலங்காய் – 25 ரூ
கோஸ் -10 ரூ
புதினா கட்டு 1க்கு -3 ரூ
மல்லி கட்டு 1க்கு -10 ரூ

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here