Home செய்திகள் இந்தியா தமிழகத்தில் பச்சை மண்டலம் கிடையாது ! கிருஷ்ணகிரியில் ஒருவருக்குத் தொற்று ஆரஞ்சு மண்டலத்திற்கு வருகிறது..

தமிழகத்தில் பச்சை மண்டலம் கிடையாது ! கிருஷ்ணகிரியில் ஒருவருக்குத் தொற்று ஆரஞ்சு மண்டலத்திற்கு வருகிறது..

454
0
Krishnagiri News
Share

இந்தியா முழுவதும் மே 4-ம் தேதியிலிருந்து மே 17ஆம் தேதி வரை, அதாவது, மேலும் இரண்டு வாரங்களுக்குத் தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு  நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
Lockdownஅதில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் சிவப்பு  மண்டலமாகவும், ஓரளவு பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆரஞ்சு மண்டலமாகவும், பாதிப்பு இல்லாத பகுதிகள் பசுமை மண்டலமாகவும் வகை பிரிக்கப்பட்டு அந்தந்த மண்டலங்களில் எந்த மாதிரியான செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்குவது என்பது பற்றி உள்துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலப் பகுதியில் வருகின்றது. 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலம் என்ற பிரிவில் வருகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பசுமை மண்டலத்தில் வருகின்றது.
இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்புக்குப் பிறகு கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் வல்லுநர் குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்தது.
மேலும் ஊரடங்கு காலகட்டத்தில், கிராமப்புறங்களில் கெடுபிடிகளைச் சற்று தளர்வு செய்வது குறித்து  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11 மணியளவில் அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்த உள்ளார்.
first corona
தற்போது கொரோனா பாதிப்பே இல்லாமல் பச்சை மண்டலத்திலிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  64 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வந்துள்ளார்.
மேலும் இவருடன் சென்று வந்த 5 பேரும் இவர் குடும்ப உறுப்பினர்களும் தற்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
தமிழகத்தில் பச்சை மண்டலம் கிடையாது !
தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலத்திலிருந்த ஒரே மாவட்டமான கிருஷ்ணகிரியும் தற்போது ஆரஞ்சு மண்டலத்திற்குள் வந்துள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here