Home ஆன்மீகம் கஷ்டம் போக்கும் வாசவி தாய் கன்னிகா பரமேஸ்வரி ஜயந்தி… இன்று உங்கள் இல்லத்தில் இதைக் தவறாமல் பன்னுங்க !

கஷ்டம் போக்கும் வாசவி தாய் கன்னிகா பரமேஸ்வரி ஜயந்தி… இன்று உங்கள் இல்லத்தில் இதைக் தவறாமல் பன்னுங்க !

1106
0
vasavi jayanthi
Share

சித்திரை மாதம் தசமி திதி நாள், ஸ்ரீ வாசவி ஜயந்தி விழாவாகக்  கொண்டாடப்படுகிறது. அன்னை வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கலியுகத்தில் உருவெடுத்த அன்னை ஆதிபராசக்தியின் அம்சம்.
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வாழ்ந்த வணிகர் குலத்தைச் சேர்ந்த தம்பதியான குஸ்ம ஸ்ரேஷ்டி –  குஸ்மாம்பா தம்பதி நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இன்றி புத்திர காமேஷ்டி யாகம் செய்து அன்னையை வேண்டி வந்தனர். அவர்களின் பக்திக்கு மனம் இரங்கி அவர்களுக்குத் தானே மகளாக வந்து பிறந்தாள். பிறந்த உடன் அன்னை பெற்றோருக்கு நான்கு கரங்களோடு காட்சியளித்து, தான் இறைவடிவம் என்பதை உணர்த்தி அடுத்த கணம் சாதாரண மழலையாய் மாறினால். தெய்வமே தனக்கு மகளானது கண்டு மகிழ்வுற்று அவளைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்தனர்.
Vasaviஅன்னை அழகிலும் அறிவிலும் சிறந்து வளர்ந்தாள். அவள் பேரழகைக் கண்டு அவளைப் பெண்கேட்டு அனுப்பினான் விஷ்ணுவர்த்தன் என்னும் அரசன். ஆனால் கன்னிகா தேவி, தான் காலம் முழுதும் சிவபூஜை செய்யவே விரும்புவதாகவும், யாவருக்கும் மனைவியாக இருக்க இயலாது என்று சொல்லி மறுத்து விட்டாள். அதைக் கேள்விப்பட்ட விஷ்ணுவர்த்தன் கோபத்துடன் அவளையும் அவள் ஊரையும் அழித்து விடுவதாகப் படையெடுத்தான். அப்போது ஊரில் உள்ளோர் கூடிப் பேசி ஒரு பெண்ணுக்காக ஊரே ஏன் அழிய வேண்டும் என்று 600க்கும் மேற்பட்டகள் ஊரைவிட்டு வெளியேறினர். ஆனால் கன்னிகா தேவியோடு மீதமிருந்த மக்கள் துணை நின்றனர்.
அப்போது தான் அன்னை யார் என்பதை விளக்கித் தன் முடிவுக்குக் கட்டுப்படுபவர்களை தன்னோடு வானுலகம் புகலாம் என்றாள். மேலும், ‘என்னைத் தெய்வமாக ஏற்ற மக்களுக்குக் கலியுகம் முடியும்வரை என்  துணை என்றும் இருக்கும் ’ என்று வாக்குக் கொடுத்தாள். அன்னையின் முடிவை ஏற்பதாக 102 கோத்திரத்தினர் கூறினர்.
God vasaviமற்றவர்களை அன்னை ஆசீர்வதித்து, உலகில் வாழும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை விளக்கி அறிவுறுத்தினாள். பின்பு அக்னி சுவாலை எழுப்பி அதில் அன்னை மறைந்தாள். அன்னையின் பின் மற்ற 102 கோத்திரத்தில் குழந்தைகள் வயோதிகர்கள் தவிர அனைவரும் அக்கினிச்சுவாலையில் இறங்கித் தீத் தீண்டாது மறைந்தனர்.
அக்கணமே அன்னையை அபகரிக்கப் படையெடுத்த விஷ்ணுவர்த்தனின் தலை வெடித்துச் சிதறியது. இதைக் கண்ட மன்னனின் படைகள் சிதறி ஓடின. அவன் நாட்டில் பல துர் சகுனங்கள் நடந்தன. இவை அனைத்திற்கும்  காரணம் வாசவி அன்னையின் கோபமே என்று உணர்ந்த விஷ்ணுவர்த்தனின் மகனான ராஜராஜ நரேந்திரன் அன்னை வாசவியின் சகோதரனான விருபாட்சனை அணுகி மன்னிப்புக் கேட்டு மன்றாடினான். அன்னைக்கு ஓர் ஆலயம் எழுப்பி வழிபடுவதாகக் கூறி அவ்வாறே ஒரு கோயிலும் எழுப்பினான்.
வணிகர் குலம் அனைத்தும் அன்னையைக் குலதெய்வமாக ஏற்று வழிபடத் தொடங்கினர். அன்னை அவதரித்த சித்திரை வளர்பிறை தசமி திதியை அன்னையின் ஜயந்தி தினமாகச் சிறப்போடு கொண்டாடி வருகின்றனர். அன்னை கன்னிகா பரமேஸ்வரியின் வழிபாடு காலப்போக்கில் நாடெங்கும் பரவியது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அன்னை கன்னிகா பரமேஸ்வரிக்கு கோயில்கள் எழும்பின.
அன்னையை வழிபட்டால் சத்ரு பயம் விலகி செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. திருமணமாகாத பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியை மனதில் நினைத்து 48 நாள்கள் வழிபட்டால் அன்னை மனம் மகிழ்ந்து அவர்களுக்குத் திருமண வரம் அருள்வாள் என்பது ஐதிகம்.
அன்னையின் மூல மந்திரமான 
ஓம் பாலாரூபிணி வித்மஹே
பரமேஸ்வரி தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்
என்னும் மந்திரத்தைச் சொல்லச் சகல நன்மைகளும் கைகூடும்.
கன்னிகா பரமேஸ்வரி அன்னை ஆதிபராசக்தியின் அவதாரம். எனவே அன்னையின் ஜயந்தி தினமான இன்று, வீட்டிலிருக்கும் அம்மன் படத்துக்கு பூ சாத்தி, நீர் மோர், பானகம் ஆகியன செய்து படைத்து வழிபட வேண்டும். அவ்வாறு செய்தால் அன்னை மனம் குளிர்ந்து நம்மைச் சூழ இருக்கும் இன்னல்களிலிருந்து விலக்கிக் காப்பாள் என்பது ஐதிகம்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here