Home செய்திகள் இந்தியா வல்லரசு நாடான அமெரிக்கா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது …

வல்லரசு நாடான அமெரிக்கா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது …

16323
0
trumph
Share

கொரோனாவிற்கு மருந்து கேட்டு அமெரிக்கா நட்பு நாடான இந்தியாவிற்கு எச்சரிக்கையுடன் கோரிக்கை விடுத்துள்ளது.
trumphகொரோனா வைரஸ் தாக்குதலில் அதிகமாகப்  பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 370000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மீண்டு வர  அமெரிக்க ஜனாதிபதி பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நோய்க்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. இந்நிலையில் இந்தியாவில் இந்த நோய் தாக்குதலில் இருப்பவர்களுக்கும். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மலேரியாவைக் குணப்படுத்தும் மருந்தை அளித்து வருகின்றனர்.  Tablet-corona
தற்போது பல்வேறு நாடுகளும் இந்த மருந்தினை கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியா ஒரு வாரத்திற்கு முன் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யத் தடை விதித்தது.
தற்போது அதிபர் டிரம்ப் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொண்டு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.  மேலும் இன்று காலை வெள்ளை மாளிகையிலிருந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த டிரம்ப்  தங்களுக்கு  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்தியாவிடம் கேட்டுள்ளதாகக் கூறினார்.
anti malariaமேலும் இந்தியா ஒரு நல்ல நட்பு நாடக இருக்கவே கட்டாயம் மருந்தை வழங்கும் என்றும், அவ்வாறு வழங்க வில்லை என்றால் அதற்கான தக்க விளைவுகள் சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகளவில் இந்தியாவில் தான் அதிகமாக  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ,மருந்து தயாரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட மலேரியாவும் , கொரோனாவும் ஒரே மாதிரி செயல் படுவதால் தற்போது உலக நாடுகள் முழுவதும் இந்த மருந்தைக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
டிரம்ப் வெளியிட்ட கோரிக்கை கலந்த எச்சரிக்கைக்கு  வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தற்போது பதில் கூறியுள்ளார், கொரோனாவின் தீவிரத் தன்மையையும், சர்வதேச நாடுகளிடையே வலுவான ஒற்றுமையையும், ஒத்துழைப்பையும் காட்ட வேண்டும் என்பதையும்  கருத்தில் கொண்டுள்ளது.
மனிதாபிமானத்தைக் கருத்தில் கொண்டு, நமது திறன்களை நம்பிய நமது அண்டை நாடுகளுக்கு பாராசிட்டமல் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவற்றைத் தேவையான அளவில் உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, கொரோனா வைரஸ் பாதிப்பு மோசமாக உள்ள  சில நாடுகளுக்கு, இந்த அத்தியாவசிய மருந்துகளை நாங்கள் வழங்குவோம் என டிரம்பின் எச்சரிக்கைக்கு இந்தியா பதிலளித்துள்ளது. மலேரியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியுமா என்று வல்லுநர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here