Home முகப்பு உலக செய்திகள் டெங்கு கொசுவை ஒழிக்கும் செயலில் அமெரிக்கா!.. சுமார் 75 கோடி தேன் உண்ணும் கொசுக்கள் வெளியீடு!…

டெங்கு கொசுவை ஒழிக்கும் செயலில் அமெரிக்கா!.. சுமார் 75 கோடி தேன் உண்ணும் கொசுக்கள் வெளியீடு!…

371
0
honey eating mosquitoes
Share

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த, 10 ஆண்டுகளாக டெங்கு, மலேரியா உள்ளிட்ட வியாதிகளைப் பரப்பும் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் கொசுக்களை கட்டுப்படுத்த அந்த மாகாண சுகாதாரத் துறை பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.

ரத்தத்தை குடிக்கும் பெண் கொசுக்களை கொல்ல கழிவு செல்லும் இடங்களில் கொசுப் புழுக்களை உண்ணும் மீன்கள் விடப்பட்டன. மேலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஆகும் செலவு அதிகம். இதனால் இந்த திட்டங்கள் வெற்றி பெறவில்லை.

இதைத்தொடர்ந்து ரத்தத்தை குடிக்கும், டெங்குவை பரப்பும் கொசுக்களை கொல்ல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள் உற்பத்தி செய்து வெளியிட விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சி நடத்தியது.

இந்த ஆராய்ச்சி கடந்த 2009ம் ஆண்டு வெற்றிபெற்றது. இதையடுத்து, ‘கோடிக்கணக்கில் இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை புளோரிடா தெருக்களில் விடலாம்’ என, விஞ்ஞானிகள் கூறினர். ஆனால் இதற்கு எதிர்ப்பு வந்தது.

அமேசானுக்குப் போட்டியாக ஆன்லைன் மருந்து விற்பனையில் களமிறங்கும் ரிலையன்ஸ்..

‘இந்த மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மனிதர்களின் ரத்தத்தை குடிப்பதற்கு மாறாக, பூக்களில் உள்ள தேனை மட்டுமே உறிஞ்சி உயிர் வாழும். இந்தக் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் உடலுறவு கொள்ளும்போது அவை இடும் கொசு முட்டைகள், வெடித்து அதிலிருந்து வெளிவரும் கொசுப்புழுக்கள் சாக்கடையில் நீந்தத் துவங்கும்போதே இறந்துவிடும்.

இதனால் கொசு உருவாகாமல் அது புழுவாக இருக்கும்போதே இறந்து கொசுக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். இந்தத் திட்டம் பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டு வெற்றிபெற்ற திட்டம்’ என, விஞ்ஞானிகள் விளக்கினர்.

ஆனால், ‘கொசுக்களை உணவாக உண்ணும் பறவைகள் பாதிக்கப்படும்’ என, இயற்கை ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து இந்த திட்டம் இழுபறியில் இருந்தது.

தற்போது ப்ளோரிடா நீதிமன்றம் இந்தத் திட்டத்தை அமல்படுத்த அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தற்போது, 75 கோடி மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள் புளோரிடா வீதிகளில் விடப்பட்டுள்ளன. இதனால் டெங்கு கொசுக்கள் சில மாதங்களிலேயே ஒழியும் என நம்பப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here