Home செய்திகள் இந்தியா அமேசானுக்குப் போட்டியாக ஆன்லைன் மருந்து விற்பனையில் களமிறங்கும் ரிலையன்ஸ்..

அமேசானுக்குப் போட்டியாக ஆன்லைன் மருந்து விற்பனையில் களமிறங்கும் ரிலையன்ஸ்..

348
0
Share

பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் சில நாட்களுக்கு முன்பே மருந்து ஆன்லைன் முறையில் விற்பனை செய்யும் திட்டத்தைத் துவங்கியது. அதனை தொடர்ந்து தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனமான நெட்மெட்ஸ் குழுமத்தின் 60 சதவீத பங்குகளை 620 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது…

எப்படி என்றால் நெட்மெட்ஸ் குழுமத்தில் பங்குதாரர்களில் ஒரு நிறுவனமான விட்டல் ஹெல்த் பிரைவேட் லிமிடெட் 60 சதவீதப் பங்குகளையும் ரிலையன்ஸ் முழுமையாக வாங்குகிறது. இதனால் நெட்மெட்ஸ் நிறுவனத்தின் நேரடி உரிமையாளராக ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது மாறியுள்ளது.

2015இல் நெட்மெட்ஸ் துவங்கப்பட்டது. அதன்பிறகு ஆன்லைன் இ-பார்மசி உரிமமும், அங்கீகாரமும் பெற்றது. இதன் மூலம் இந்தியா முழுவதும் நேரடியாக வீடுகளுக்கு மருந்துகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது கொரோனா நெருக்கடி காரணமாக அனைத்தும் நேரடி ஆன்லைன் வர்த்தகம் ஆக மாறிவிட்டது. இதனால் அமேசான், வால்மார்ட் நிறுவனத்துக்கு பிலிப்கார்ட், ரிலையன்ஸ் ஸ்டோர் என்றழைக்கப்படும் ஜியோ மார்ட் போன்ற பல்வேறு நிறுவனங்கள் ஆன்லைன் அதிகரித்துள்ளது.

தற்போது அமேசான் நிறுவனம் மருந்து விற்பனையை தொடங்கிய சில தினங்களிலேயே ரிலையன்ஸ் நிறுவனமும் ஆன்லைன் மருந்து விற்பனையைத் தொடங்கியுள்ளது. ஆனால் இந்த ஆன்லைன் மருந்து விற்பனைக்கு அரசாங்கத்தின் முழு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்று சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here