Home செய்திகள் இந்தியா பங்குச்சந்தை கடும் சரிவு … ஒரே நாளில் 700 புள்ளிகள் வீழ்ச்சி !

பங்குச்சந்தை கடும் சரிவு … ஒரே நாளில் 700 புள்ளிகள் வீழ்ச்சி !

371
0
Share

இந்தியப் பங்குச்சந்தையில் வாரத்தின் கடைசி நாளான நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமாகியது. தேசிய பங்குச்சந்தை நிப்டியும் 200 புள்ளிகள் சரிந்தது.

வாரத்தின் கடைசி நாளான நேற்று தொடக்கத்திலேயே 500 புள்ளிகள் சரிவைச் சந்தித்த இந்தியப் பங்குச் சந்தை சற்று மீள முயன்றது ஆயினும் மீண்டும் அதே வேகத்திற்கு மேலும் சரிந்து வீழ்ச்சியில் வர்த்தகமாகி முடிந்தது. கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்கப் பங்குச் சந்தைகள் மற்றும் ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தது. அதனால் இந்தியப் பங்குச்சந்தைகளும் சரிவுடன் காணப்பட்டது.

லடாக்கில் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க இந்தியா – சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் நேரில் சந்திப்பு !
நேற்று வர்த்தக நேரத் துவக்கத்தில் சென்செக்ஸ் 579.74 புள்ளிகள் சரிந்து 38,411.20ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 166.10 புள்ளிகள் சரிந்து 11,361.35 ஆகவும் வர்த்தகமாகின. காலை 11.45 மணியளவில் சென்செக்ஸ் 475, நிப்டி 132 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகின.

வாரத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 633 புள்ளிகள் சரிந்து 38357 எனவும் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 193 புள்ளிகள் சரிந்து 11333 என முடிந்தது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here