Home முகப்பு உலக செய்திகள் கொரோனாவின் கோரப்பசியில் சிக்கிய இத்தாலி! பலியின் எண்ணிக்கை பல ஆயிரம் கடந்தன…

கொரோனாவின் கோரப்பசியில் சிக்கிய இத்தாலி! பலியின் எண்ணிக்கை பல ஆயிரம் கடந்தன…

487
0
Share

கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளது. உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கத்தால் இதுவரை 11000 மேற்பட்டோர் இறந்துள்ளார், 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவை விட இத்தாலியில் தற்போதைய நிலவரம் படி மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

சீனாவுக்கு அடுத்தப்படியாக கொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு அதிகமானோர் பலியாகிவரும் நாடாக இத்தாலி விளங்கி வந்தது.

இந்த நிலையில், அங்கு வியாழக்கிழமை (மார்ச் 19) மட்டும் ஒரேநாளில் 427 பேர் கொரோனாவுக்கு இரையாகினர்.
இத்தாலியில் தற்போது வரலாறு காணாத அளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது, இத்தாலியில் இதுவரை இல்லாத வகையில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 627 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 5476 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து உலகில் எல்லா நாடுகளை விட அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகிய நாடாக கருதப்படுகிறது. இந்த பேரழிவு மிகவும் வருத்தத்தில் உல்லாக்கியுள்ளது என்று இத்தாலி ஜனாதிபதி  வருந்துகின்றார், மேலும் இவர் கூறும் வார்த்தை மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது,


இத்தாலியில் தற்போது இறந்தவர்களை புதைக்க இடம் கூட இல்லை, இடமே இல்லாத அளவிற்கு இறப்பை கொண்டுள்ள இத்தாலி மக்கள் என்று வருந்துகிறார், அந்நாட்டின் ஜனாதிபதி.

இத்தாலியில் கடந்த இந்த இரண்டு நாட்களில் மட்டும் 1000 மேற்பட்டோர் இறந்துள்ளது, மிகவும் வருத்தத்தை தெரிவிக்கிறது. ஒரே நாளில் இத்தாலியில் 5986 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here