Home செய்திகள் இந்தியா NEET , JEE தேர்வு நடக்கும் தேதியை மத்திய அரசு வெளியிட்டது…

NEET , JEE தேர்வு நடக்கும் தேதியை மத்திய அரசு வெளியிட்டது…

829
0
Share

ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் மேற்படிப்பிற்காக சில முக்கிய நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும். அந்த வகையில் மருத்துவ படிப்பிற்கு NEET  தேர்வு ஒரு சில பெரிய பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான JEE  தேர்வும் நடத்தப்படும். அதே போல் இந்த ஆண்டும் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக இந்த தேர்வு ஜூலை 26-ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்கள் நலன் கருதி  ஒத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இதே போல் இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதை அடுத்து இந்த இரண்டு தேர்வுகள் குறித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய தேர்வு முகமைக்கு  மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் தேர்வு நடத்த இப்போதைக்கு எந்த ஒரு சாத்தியக்கூறும் இல்லை எனத் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. எனவே இது தொடர்பாக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்  ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
JEE NEETமேற்கண்ட அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது  : மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடத்தப்படும் என்றும், அதே போல் பொறியியல் படிப்பில் சேர நடத்தப்படும் நுழைவுத் தேர்வான JEE  செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் மாணவர்களின் நலன் கருதி எடுத்த முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here