Home செய்திகள் இந்தியா TCS, ITC, BHARTI AIRTEL , INFOSYS பங்குகள் விர்ர்…

TCS, ITC, BHARTI AIRTEL , INFOSYS பங்குகள் விர்ர்…

533
0
TCS INfosys
Share

இந்தியாவில் அதிக, சந்தை மதிப்பு கொண்ட டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் இருக்கும் நான்கு நிறுவனங்கள், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 1.12 லட்சம் கோடி ரூபாய் வரை சந்தை மதிப்பு அதிகரித்துள்ளதாம். இந்த சந்தை மதிப்பு என்பது ஆங்கிலத்தில், Market capitalization என்பர். பொதுவாக Market capitalization என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனங்கள் வர்த்தகமாவதைப் பார்த்து இருப்போம். அவ்வாறு வர்த்தகம் ஆகும் ஒவ்வொரு பங்குகளுக்கு ஒரு விலை இருக்கும். மொத்த பங்குகள் * ஒரு பங்கின் விலை = மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்.
Sensexஇந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஐடி நிறுவனமான TCS நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 47,148 கோடி ரூபாய் வரை அதிகரித்து உள்ளதாம். அதே போன்று  ITC நிறுவனத்தின் சந்தை மதிப்பும்  26,735 கோடி ரூபாய் அதிகரித்து உள்ளதாம்.
TCS ITCஇந்தியாவின் முக்கிய டெலிகாம் கம்பெனியானா BHARTI AIRTEL -ம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 21,222 கோடி ரூபாயாக  அதன் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. அதேபோல் INFOSYS நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் 17,014 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
ஆனாலும் சில முக்கிய நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, ஹெச் டி எஃப் சி, ஹிந்துஸ்தான் யுனிலிவர், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஐசிஐசிஐ பேங்க்… ஆகியவற்றின் பங்குகள் தன் சந்தை மதிப்பைச் சற்று இழந்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆயினும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனி தான், இந்தியாவிலேயே அதிக சந்தை மதிப்பைக் கொண்ட நிறுவனமாக நம்பர் 1 இடத்தை தக்கவைத்துள்ளது.
ஆனால் நேற்றைய பங்கு சந்தையில் BHARTI AIRTEL -ன் பங்குகளின் விலை சரிந்தது குறிப்பிடத்தக்கது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here