Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் பள்ளி திறப்பு தள்ளி போவதால் பாடத்தை குறைக்கும் திட்டம் !

பள்ளி திறப்பு தள்ளி போவதால் பாடத்தை குறைக்கும் திட்டம் !

552
0
students
Share

கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக வழக்கமாக ஜூனில் திறக்கும் பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வழக்கமாக பாடங்களை நடத்தி முடித்து உரிய பருவத்தில் தேர்வுகள் நடக்கும் முறை வரும் கல்வியாண்டில் சவாலாக தான் இருக்கும்.

தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள முப்பருவ தேர்வு முறையில் மாற்றம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதன்படி 1 முதல் 8ம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள முப்பருவ பாடமுறையில் 1 பருவ பாடத்தை கைவிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

DPI

அதேபோல் இந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களின் அளவையும் குறைக்க வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கின்றது . 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களின் எண்ணிக்கை அதிகம். ஏற்கனவே புதிய பாடத்திட்ட அடிப்படையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடச் சுமை அதிகமாக இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர் குறைக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் தான் பள்ளிகள் திறப்பா ? தமிழக அரசின் திட்டம்..

மேலும் குறுகிய காலத்தில் பொதுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டி உள்ளதால் முழுமையாக பாடங்களை நடத்தி முடிப்பது சற்று சிரமமாக இருக்கும். இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சில பாடங்களை குறைக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் தற்போது பள்ளிகள் திறப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஏற்ப்பட்டுள்ள காலதாமதத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here