Home செய்திகள் இந்தியா டெல்லி டூ லண்டன் ! உலகின் நீண்ட பேருந்து சேவை… கட்டணம் கம்மிதான்..

டெல்லி டூ லண்டன் ! உலகின் நீண்ட பேருந்து சேவை… கட்டணம் கம்மிதான்..

409
0
Share

டெல்லியிலிருந்து லண்டன் வரை பேருந்து மூலம் பயணம் செய்ய டெல்லியில் உள்ள பிரபல டூரிஸ்ட் நிறுவனம் தற்போது முடிவெடுத்துள்ளது. அதற்கான சேவை அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது.

குருகிராமை சேர்ந்த அட்வெஞ்சர் ஓவர்லேண்ட் என்ற சுற்றுலா நிறுவனம் நீண்ட தூரப் பேருந்து போக்குவரத்து சேவையைத் தொடங்க உள்ளது. ஆம், டெல்லியிலிருந்து லண்டன் வரை சுற்றுலா பேருந்து மூலம் 18 நாடுகளைத் தாண்டி 70 நாட்கள் ஒரே பயணமாகச் செல்ல முடிவெடுத்துள்ளது.

இந்த பயணத்தில் 18 நாடுகளைத் தாண்ட வேண்டும். மேலும் 20 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணிக்க வேண்டும் 18 நாடுகள் என்பது மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனா, ரஷ்யா, பெல்ஜியம், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளாகும். இந்த நாடுகளை எல்லாம் கடந்து லண்டனுக்குச் செல்ல வேண்டும். இதற்காக ஒரு பயணிக்குக் கட்டணம் 15 லட்சம் ரூபாய் என நிர்ணயித்துள்ளது. இந்த சேவை வரும் மே மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்தில் 20 பயணிக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் முழு பயண கட்டணம் செலுத்திய பிறகே பயணிகள் முன்பதிவு ஏற்றுக் கொள்ளப்படும் எனச் சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

70 நாட்கள் பேருந்துகளில் பயணம் செய்யச் சொகுசு வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த பயண பேருந்திற்கு பஸ் டூ லண்டன் எனப் பெயரிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பயணத்திற்கு 10 விசாக்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here