Home செய்திகள் இந்தியா SRM பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தேர்வின்றி மதிப்பெண் !

SRM பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தேர்வின்றி மதிப்பெண் !

472
0
SRM
Share

SRM பல்கலைக்கழக மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வின்றி ஏற்கனவே எடுத்துள்ள உள்மதிப்பெண் அடிப்படையில் செமஸ்டர் மதிப்பெண்களை வழங்க முடிவெடுத்துள்ளது பல்கலைக்கழகம். இதனைப் பதிவாளர் N.சேதுராமன் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாகத் தேசிய அளவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்ச் 22 முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது. இந்த காலகட்டத்தில் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்  தேர்வு, பாலிடெக்னிக் தேர்வு, இன்ஜினியரிங் தேர்வு, கலை மற்றும் அறிவியல் தேர்வுகள் என அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தினால் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து பருவ தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது தனியார் பல்கலைக்கழகமான SRM  பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நலன் கருதி தங்கள் மாணவர்களுக்கு உள் மதிப்பீடு அடிப்படையில் செமஸ்டர் தேர்விற்கான மதிப்பெண்களை வழங்க முடிவெடுத்துள்ளனர். இதனை N.சேதுராமன் அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியிருப்பதாவது :
கொரோனா பரவல் காரணமாக தற்போது தேர்வு நடத்தும் சூழல் இல்லை. எனவே மாணவர்கள் ஏற்கனவே பெற்றுள்ள உள்மதிப்பீடு கொண்டு செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இது B.Tech   M-Tech, B.com, M.Arch, B.A, B.Sc, BBA, MBA போன்ற பிரிவின் கீழ் படிக்கும் SRM பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும். இது தொடர்பான செயல்முறைகள் மற்றும் விதிமுறைகளை SRM பல்கலைக்கழக இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் வரும் 22ம் தேதி வெளியிடப்படும். இதே போல் அரியர் வைத்திருப்பவர்கள் குறித்த அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும்  கூறினார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here