Home செய்திகள் இந்தியா மகாபாரதம் படத்தில் அமீர்கான் !

மகாபாரதம் படத்தில் அமீர்கான் !

152
0
mahabharat
Share

மகாபாரத காவியத்தைப் படமாக்குவது குறித்து அமீர்கான் பல முறை தெரிவித்துள்ளார். இது அவருடைய லட்சியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது ஊரடங்கு காரணத்தினால் இதற்குச் சம்பந்தமான வேலைகளில் களமிறங்கியுள்ளார்.
ஆம், பிரபல இயக்குநர் ராஜமவுலியின் தந்தையும், பாகுபலி, பாகுபலி 2, என பல சிறப்புக் காவிய படங்களுக்குக் கதை எழுதிய விஜயேந்திர பிரசாத்திடம் இந்த மகாபாரதக் கதையை எழுதும் படி அமீர்கான் பொறுப்பு அளித்துள்ளார். ஏனென்றால் விஜயேந்திர பிரசாத்துக்குக் காவிய கதைகள் மீது தனி ஆர்வம் உண்டு. எனவே இந்த மகாபாரத கதையை எழுதுவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார் என்று அவர் நம்புகிறார்.
இது குறித்து விஜயேந்திர பிரசாத் கூறியிருப்பதாவது : இந்த மகாபாரத கதையை அமீர்கான் என்னிடம் வழங்கும் போது இதன் கதை திரைக்கதை முழுவதும் என்னை  எழுதச் சொல்லி உள்ளார். இந்த ஸ்கிரிப்டை பல மொழியில்  உருவாக்கம் செய்ய உள்ளேன். இது வெறும் தொடக்கம் தான் இன்னும் ஏராளமான ஆலோசனையில் அவருடன் ஈடுபட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here