Home செய்திகள் இந்தியா உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ! இஸ்ரேல் அறிவிப்பு…

உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ! இஸ்ரேல் அறிவிப்பு…

360
0
isreal
Share

இஸ்ரேலிலிருந்து உளவு பார்க்க புதிய ஒரு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஒஃபேக் 16 என்ற புதிய செயற்கைக் கோளானது மின் பொறியியல் திறன் கொண்ட உளவு செயற்கைக்கோள் ஆகும்.
இன்று காலை 4 மணி அளவில் விண்ணில் வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது என்று அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார்.
இந்த செயற்கைக் கோளானது 16 மேம்பட்ட சிறப்புத் திறன்களைக் கொண்ட உளவு செயற்கைக்கோள். புவியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட  செயற்கைக்கோள் தகவல்களைப் பரிமாறத் தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு செயற்கைக்கோளின் பரிமாற்றங்களும் பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் அரசிற்கு பாதுகாப்புக்காகத் தொழில்நுட்ப மேன்மையை உளவுத்துறை திறன் கொண்ட இந்த செயற்கைக்கோள் மிகவும் அவசியம் என்று பாதுகாப்பு மந்திரி  பென்னி கான்ட்ஸ் கூறியுள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here