Home டெக்னாலஜிஸ் AUTOMATION சர்ச்சையை எழுப்பியது JIO MEET ! காப்பியா ! போட்டியா…

சர்ச்சையை எழுப்பியது JIO MEET ! காப்பியா ! போட்டியா…

441
0
Jio Meeting Conferencing Service
Share

கொரோனா பரவலால் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பல ஐடி நிறுவனங்கள் work from home  முறையைக் கையில் எடுத்துள்ளனர்.
அதே போல் பள்ளி கல்லூரிகள், தங்கள் மாணவர்களுக்கு வீடியோ கால் வழியாக ஆன்லைன் வகுப்பு நடத்துகின்றனர். இதனால் ZOOM, Google Meet  போன்ற ஆப்கள் அதிக அளவு பதிவிறக்கம் செய்யப்பட்டது. அது மட்டுமின்றி இந்த ஆப்கள் பதிவிறக்க எண்ணிக்கை இந்த நான்கு மாதங்களில் உச்சத்தை தொட்டது.
ஏனென்றால் இந்த ஆப்கள் வாயிலாக தான் அலுவலக மீட்டிங்கள் நடத்தப்படுகின்றன. தற்போது JIO நிறுவனம் இந்திய தொழில்நுட்பத்தில் JIO MEET என்று புதிய ஆப்பை அறிமுகம் செய்தது.
மேற்கண்ட ZOOM,Google MEET ஆப்கள்  குறிப்பிட்ட மீட்டிங்கிற்கு பிறகு சிறிய சந்தா பணத்தை எதிர்பார்க்கிறது. இதற்கு JIO MEET தற்போது மாற்றாக முழுவதும் இலவச மீட்டிங் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது. இந்த JIO MEET  ஆனது ஆப் மட்டுமின்றி ஆன்லைன் பிரவுசர் வாயிலாகவும் மீட்டிங் தொடரலாம் இணைந்து கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது.
இந்த தொழில்நுட்பம் முழுக்க முழுக்க இந்தியத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. எனவே தற்போது இந்தியர்களே அதிகம் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.  இத்தகைய சூழலில் இந்த ஆப் முழுக்க முழுக்க zoom  போன்ற வடிவமைப்பைப் பெற்றுள்ளது என்று டுவிட்டரில் இதனைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஒரு பக்கம் கலாய்த்து வருகின்றனர்.
ஒரு சில மீம்ஸ் கிரேட்டர்கள் இது zoomற்கு போட்டியா, இல்லை காப்பியா என்று கிண்டலடித்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.அதனை ஒப்பிடும் போது முழுக்க ஒத்துப் போவதால் இது போன்று கிண்டல் அடிக்கின்றனர். இது குறித்து JIO தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here