Home செய்திகள் இந்தியா கோடைக் காலத்தில் வறண்ட சருமத்தைப் பொலிவாக்க சில அழகுக் குறிப்புகள் !

கோடைக் காலத்தில் வறண்ட சருமத்தைப் பொலிவாக்க சில அழகுக் குறிப்புகள் !

404
0
Lemon
Share

வெயில் காலத்தில் நம் சருமம் வறண்டு காணப்படும். இதற்குக் காரணம் ஈரப்பதம் நம் உடலில் குறைவது தான். அதிகப்படியான வெயிலால் முகத்தில் ஈரப்பதம் குறைகிறது. இதனால் முகம் பொலிவிழந்து விடும். சில நேரங்களில் எரிச்சல் கூட உண்டாகலாம். வறண்ட சருமத்துக்கு எப்போதும் பழங்களைக் கொண்டு செய்யப்படும் ஃபேஷியல் மிக உதவியாக இருக்கும். என்னென்ன பழங்களை எப்படிப்  பயன்படுத்தலாம் என்பதையும் அறிந்துகொள்வோம்.
பப்பாளி

பப்பாளிப் பழம் சருமத்தில் உள்ள  வறட்சி தன்மை நீக்கி ஈரப்பதத்தை தக்கவைக்கக்கூடியது. இந்த லாக்டவுன் காலத்தில் இதை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சரும சுருக்கம் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
papaya skin maskநன்கு பழுத்த பப்பாளிப் பழத்தைக் கூழ் போல் அரைத்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் பேஸ்ட் போல் தடவுங்கள். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை மிதமான நீரில் கழுவினால் முகத்தின் வறட்சி படிப்படியாக நீங்கும். தேனுக்குப் பதிலாகப் பாலும் கலந்து பயன்படுத்தலாம்.
பசுந்தயிர்
கெட்டியான பசுந்தயிர் முகம் இழந்த நிறத்தை மீட்கவும் பளிச்சென்று வைக்கவும் உதவும். குறிப்பாக இயற்கையான ஃப்ளீச் என்று சொல்லுமளவிற்குத் தயிர் செயல்படுகிறது. தயிருடன் மேலும் சருமத்துக்கு ஈரப்பதம் அளிக்கத் தேன் சேர்க்கலாம்.
curdமூன்று தேக்கரண்டி தயிருடன் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து நன்கு குழைத்து முகத்திலும் கழுத்திலும் தடவி மசாஜ் செய்து. 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பொலிவுறும்.
பாதம்
முன் தினம் இரவு 8 பாதாம் பருப்பை ஊறவைத்து மறுநாள் தோலை நீக்கி பன்னீர் சேர்த்து அரைக்கவும். இதை முகத்திலும் கழுத்திலும் தடவி 20 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
badamஇவை வறட்சியோடு முகத்தின் நிறத்தையும் மேன்மை படுத்தும். பாதாமீற்க்கு பதிலாகப் பாதாம் எண்ணெய்யையும் வைட்டமின் E அயிலையும் கலந்து முகத்துக்கு மசாஜ் செய்யலாம்.
தேங்காய்
வறண்ட சருமத்திற்குத் தேங்காய் நல்ல பலன் தரும். அரை கப் தேங்காய்த்துருவலை எடுத்து மிக்ஸியில் மசிய  coconutஅரைத்து (நீர் விடாமல்) முகத்தில் தடவி வட்ட வடிவில் இலேசாக மசாஜ் செய்யவும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் மசாஜ் செய்து பாலேடை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here