Home செய்திகள் இந்தியா Tiktok ற்க்கு பதிலாக அறிமுகம் செய்யப்பட்ட சிங்காரி செயலி புதிய சாதனை!…

Tiktok ற்க்கு பதிலாக அறிமுகம் செய்யப்பட்ட சிங்காரி செயலி புதிய சாதனை!…

384
0
Chingari
Share

சீன தொடர்புடைய செயலிகளுக்கு இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்தது. அதன் பிறகு இந்தியாவின் ஏராளமான செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த வகையில் பிரபலமானதாக இருந்த Tiktok செயலி சீனாவின் செயலி என்பதால் தடை செய்யப்பட்டிருந்தது.

தற்போது இந்த செயலியை போன்றே சிங்காரி என்னும் செயலியை பெங்களூருவை சேர்ந்த பொறியாளர்கள் தயாரித்து வெளியிட்டு இருந்தனர். Tiktok போன்று இந்த செயலியும் சிறிய அளவிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். இந்த செயலிக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மைக்ரோசாப்டிற்கு விற்க முடியாது ! டிக்டாக்..

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 30 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அதிலும் அதிகமாக 18 வயது 35 வயதானவர்கள் தான் இந்த செயலியை அதிகம் பதிவிறக்கம் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here