Home செய்திகள் இந்தியா அட்லி உடன் இணையும் ஷாருக்கான் !

அட்லி உடன் இணையும் ஷாருக்கான் !

474
0
Share

பாலிவுட் திரையுலகில் நம்பர் 1 கதாநாயகனாக விளங்கும் ஷாருக்கானுடன் தமிழ்த் திரைப்படம் இயக்குநர் அட்லி இணைகின்றனர். அதிலும் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி,மெர்சல், பிகில் என வரிசையாக ஹிட் படம் வழங்கிய இயக்குநர் தான் அட்லி. இவர் தற்போது பாலிவுட் நடிகரான ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார். இவர் இயக்கிய அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து இவர் ஷாருக்கானுடன் இணைந்து உள்ளார்.

இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்றும் தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு சங்கி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே இணையவுள்ளார்.

பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு கருத்துக் கேட்பு..

இந்நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தற்போது தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கான் பிறந்தநாள் நவம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ஷாருக்கான் 2018 ஆம் ஆண்டு ஜீரோ என்ற படத்தில் கடைசியாக நடித்தார். அதன் பிறகு அட்லி உடன் தான் இணைய உள்ளார். எனவே ஷாருக்கான் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here