Home வேலைவாய்ப்புகள் கல்வி பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு கருத்துக் கேட்பு..

பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு கருத்துக் கேட்பு..

86
0
DPI
Share

காலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்கலாமா என்று பெற்றோர்களிடம் பள்ளிக்கல்வித்துறை கருத்துக் கேட்பு முறையில் முடிவு செய்ய உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பிற்கு இந்தியா முழுவதும் முழு ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் வீடுகளில் இருந்தவாறே ஆன்லைன் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது பல தளர்வுகள் மத்திய அரசும் மாநில அரசும் அளித்துள்ளனர். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களின் விருப்பத்துடன் பள்ளிகளுக்கு வரலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

அதன் அடிப்படையில் மேற்கு வங்கம், ஆந்திரா, அசாம், கோவா, பீஹார் போன்ற சில மாநிலங்களில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் என மாநில அரசு அறிவித்தது.

தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கலாமா கல்வித்துறை அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தற்போது செப் -30 ஆம் தேதிக்குப் பிறகு தள்ளி வைக்க முடிவு செய்தது.

வீட்டு வாசலிலேயே மின் கட்டண வசூல்- தமிழக அரசு அறிமுகம்.

அதே நேரம் காலாண்டு விடுமுறை முடிந்ததும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார்ப் பள்ளிகளில் எனப் பல ஆலோசனைக் கூட்டம் நடத்தி கருத்துகளைக் கேட்ட பிறகு பள்ளி திறக்கும் தேதியை முடிவு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

அதே போல் அக்டோபர் 2க்கு பிறகு பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறந்து முழு வீச்சில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்ற ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்துவதாகவும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here