Home அரசாங்க வேலை RRB NTPC(Railway) “ரயில்வே துறையை காப்பாற்றுங்கள்“ டிவிட்டரில் டிரெண்டாகும் #SaveRailwaySaveNation!..

“ரயில்வே துறையை காப்பாற்றுங்கள்“ டிவிட்டரில் டிரெண்டாகும் #SaveRailwaySaveNation!..

476
0
Railway
Share

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிவிட்டரில் #SaveRailwaySaveNation என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

மத்திய அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க திட்டமிட்டு வருகிறது. அதில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கவும் பல்வேறு முதலீடுகளை ஈர்க்க இந்த திட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. குறிப்பாக வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும் என்றும், ஏற்கனவே கொரோனாவால் பலர் வேலை இழந்துள்ளதாக இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய ரயில்வே புதிய பணியிடங்களின் உருவாக்கத்தை நிறுத்த உத்தரவு!…

இதன் விளைவாக இன்று டிவிட்டாரில் #SaveRailwaySaveNation, #SaveRailwaySaveNationIndian என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக #SaveRailwaySaveNation என்ற ஹேஷ்டேக் மட்டும் 1.25 லட்சம் பேர் ரீடிவிட் செய்துள்ளனர்.

பொதுத்துறையில் பணியாற்றும் பணியாளர்கள் ஏதாவது ஒரு சங்கத்தை வைத்துக்கொண்டு அவர்களுடைய கோரிக்கை நிறைவேற்ற போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் ரயில்வேயில் தனியார் துறை பங்களிப்பு வரும் போது அந்த மாதிரியான பிரச்சனைகளும் வராது, பயணிகளுக்கோ ரயில்வே ஊழியர்களுக்கோ எந்த பாதிப்பு ஏற்படாது மேலும் ரயில்வே மேலும் சிறப்படையும் என ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here