Home டெக்னாலஜிஸ் AUTOMATION மனிதக் கழிவுகளை அகற்ற ரோபோ ! தமிழகம் அசத்தல் கண்டுபிடிப்பு..

மனிதக் கழிவுகளை அகற்ற ரோபோ ! தமிழகம் அசத்தல் கண்டுபிடிப்பு..

412
0
Share

இது நாள் வரை மனிதக்கழிவுகளை அகற்ற மனிதர்களே பணிபுரிந்து வந்தனர். இதனால் ஏராளமான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மனிதக் கழிவுகளை அகற்றும் பொழுது சுகாதாரமற்ற சாக்கடைகளில் இறங்க வேண்டிய சூழல் ஏற்படும். அவ்வாறு இறங்கும்போது ஒரு சில விஷ வாயுக்களும் தாக்க நேரிடுகிறது.

இந்த விஷவாயுக்களால் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே இதைத் தடுக்க ஏதாவது ஒரு கண்டுபிடிக்க வேண்டும் என்று நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது கோவை மாநகராட்சியின் கழிவுகளை அகற்ற ரோபோ பயன்படுத்த முடிவு எடுத்துள்ளனர். இதற்கு ரோபோட் 2.0 என்று பெயரிட்டுள்ளனர். இதன் மூலம் மனிதக்கழிவுகளை ரோபோட் 2.0 உதவியுடன் அகற்ற முடியும் என்று அமைச்சர் எஸ். பி வேலுமணி தெரிவித்துள்ளார்.


இது குறித்து எஸ்.பி வேலுமணி கூறியதாவது :
நச்சு வாயுக்களும், அழுக்குகளும் நிறைந்துள்ள பாதாளச் சாக்கடையில் மனிதர்கள் இறங்குவதால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்காக தற்போது கோவையில் ரோபோட் இயந்திரம் பயன்படுத்தத் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்களின் உதவியுடன் ரோபோட் 2.0 பயன்படுத்தி மனித கழிவுகளை அகற்ற முடியும். அது மட்டுமின்றி ஏதாவது அடைத்து இருந்தாலும் அதை வைத்தே கண்காணிக்க ஒரு டிஸ்ப்ளே இந்த ரோபோட்டை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 34 மாவட்டங்களிலும் இந்த ரோபோட் பயன்முறை கொண்டுவரப்படும். எனவே மனிதர்களின் கழிவுகளை அகற்ற நேரடியாகப் பாதாள குழிக்குள் இறங்கத் தேவைப்படாத. இதனால் சுகாதாரத்துடன் துப்புரவுப் பணியாளர்கள் பணியாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார். சுகாதார பணியாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் இந்த இயந்திரம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here