Home செய்திகள் இந்தியா ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் பயணிகள் இரயில் சேவை தொடக்கம் ! இரயில்வே துறை அறிவிப்பு…

ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் பயணிகள் இரயில் சேவை தொடக்கம் ! இரயில்வே துறை அறிவிப்பு…

461
0
railway department
Share

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தினை தாண்டியுள்ள நிலையில், தற்போது முழு ஊரடங்கு நடவடிக்கையானது இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசும் மாநில அரசும் அளித்திருந்தது.
தற்போது ஜூன் 1 முதல் பயணிகளுக்கான இரயில் சேவையை நாடு முழுவதும் தொடங்க இரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக ஜூன் 1 முதல் 200 பயணிகள் இரயில் சேவையை நாடு முழுவதும் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும், ஏசி வகுப்புகள் அல்லாத இரயில்களாக இருக்கும் எனவும் இரயில்வே துறை டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
Railway இதற்கு முன்பு நாடு முழுவதும் சிக்கித் தவித்த புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 366 சிறப்பு இரயில்களை மட்டும் இரயில்வே இயக்கியுள்ளது. அதிலும் பயணிகள் இரயிலை பொறுத்த வரையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் 15 ரயில்களை இயக்கியது. அதனை தொடர்ந்து இந்த அறிவிப்புகளை இரயில்வே வெளியிட்டுள்ளது.
இந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கான இரயில் சேவையில் பல்வேறு தரப்பினர் எதிர்க்கின்றனர். மேலும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் வெளிப்படையாகவே இந்த இரயில் சேவையை திட்டத்தை எதிர்த்தன. இதன் காரணமாக தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் விமர்சனங்களை மாநிலங்கள் முன்வைத்தன.
முழு ஊரடங்கு உத்தரவிற்கு முன்பு இந்திய இரயில்வே நாள்தோறும் 12 ஆயிரம் ரயில்களை இயக்கிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here