Home செய்திகள் இந்தியா ஒரு சிலை தான் ! விநாயகர் சதுர்த்தி குறித்து மும்பை அரசுத் திட்டம்..

ஒரு சிலை தான் ! விநாயகர் சதுர்த்தி குறித்து மும்பை அரசுத் திட்டம்..

774
0
Share

கொரோனா பரவல் காரணமாக மும்பையில் ஒரு வார்டுக்கு ஒரு விநாயகர் சிலை மட்டுமே வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது மும்பை அரசு. அது மட்டுமில்லாமல் 4 அடிக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதிலும் மும்பை மாநிலத்தில் தான் அதிக தொற்று பரவியுள்ளது. இதுவரை 3.2 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஸ்பெயின் என்ற நாட்டை காட்டிலும் அதிகம்.

இந்த சூழ்நிலையில் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், எப்போதுமே விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் மும்பையில், ‘ஒரு வார்டுக்கு ஒரு சிலை தான் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக மும்பை மாநகராட்சியின் உதவி கமிஷனர் தெரிவித்திருப்பதாவது: மும்பையில் ஒரு வார்டில் ஒரு சிலை மட்டுமே நிறுவ வேண்டும். அதிலும் விநாயகரின் சிலைகள், 4 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. இந்த விநாயகர் சிலைகளைக் கரைக்கச் செய்ய, செயற்கை நீர்நிலைகள் உருவாக்கப்படவுள்ளது. அங்கு மக்களின் பாதுகாப்பிற்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். அங்கு மட்டுமே சிலைகளைக் கரைக்கச் செய்ய வேண்டும்.

மேலும் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், விநாயகர் சிலைகளைக் கரைக்கச் செய்யவும் உரியத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here