Home செய்திகள் இந்தியா கொரோனாவால் 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் OLA !

கொரோனாவால் 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் OLA !

542
0
covid 19
Share

OLA நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாவிஷ் அகர்வால் ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் OLA நிறுவனத்தின் வருவாய் பெருமளவு  பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கால்டாக்சி நிறுவனமான OLA, தன் ஊழியர்களில் 1,400 பேரைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரசால் OLA நிறுவனத்தின் வருவாய் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். OLA ceo
துரதிர்ஷ்டவசமாக, கொரோனா நெருக்கடி மிகப்பெரிய பொருளாதார மற்றும் சமூக அழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த உலகம் எந்த நேரத்திலும் கொரோனாவுக்கு முந்தைய காலத்திற்கு மாறப்போவதில்லை என்றும் அகர்வால் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் OLA  நிறுவனத்தின் வருவாய் 95 சதவீதம் குறைந்துள்ளது.
இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு தழுவிய ஊரடங்கின் 4-ஆம்  கட்டத்தில் இருப்பதால், பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்ட OLA கால்டாக்சி நிறுவனம் தங்கள்  ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. ஊரடங்கு காரணமாக, பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்ததால், தங்கள் நிறுவனம் பல்வேறு பாதிப்புகள் அடைந்துள்ளது.
 மார்ச்.25ம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் OLA கேப்ஸ் போன்ற கால் டாக்சி தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத்  தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் OLA போன்ற கால் டாக்சி நிறுவனங்களின் கீழ் செயல்படும் மூன்று சக்கரம் மட்டும் நான்கு சக்கர வாகனங்களை இயக்கலாம் எனக் கர்நாடக அரசு விதித்த  புதிய விதிமுறைகளை அறிவித்ததையடுத்து, நீண்ட நாட்களுக்குப் பின்னர் நேற்று முதல் கர்நாடகாவின் பெங்களூர், மைசூர், மங்களூர், ஹூபாலி, தார்வாத் உள்ளிட்ட பகுதிகளில் OLA நிறுவனம் மீண்டும் தனது சேவையைத் தொடர்ந்துள்ளது.
புதிதாக உள்ள விதிமுறைகளின் படி, கால் டாக்சியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், ஓட்டுநருக்குப்  பின் இருக்கையில் ஜன்னல் ஓரங்களில் 2 பயணிகள் மட்டும் அமர்ந்து பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here