Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் உடல் பருமனால் 13 வகையான புற்றுநோயை உண்டாக்குமா!..

உடல் பருமனால் 13 வகையான புற்றுநோயை உண்டாக்குமா!..

491
0
Belly Fat People
Share

கூடுதல் எடை அதிகரித்தால் இதய நோய் வரும், உடல் சுறுசுறுப்பு குறைந்து சோர்வு, அசதி ஒட்டிக்கொள்ளும், மூட்டு வலி அதிகரிக்கும், மூச்சு வாங்கும் இப்படியான பிரச்னைகளைதான் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் அதனால் புற்றுநோயும் வரும் என்பது தெரியுமா..? அதுவும் நிரூபிக்கப்பட்ட 13 வகையான புற்றுநோய்களை உண்டாக்கும் என்பது தெரியுமா..?

ஆம், தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் (National Cancer Institute) படி உலக அளவில் 5,44,000 புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்துள்ளனர். இது முழுக்க முழுக்க உடல் பருமனால் மட்டுமே ஏற்பட்டது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளன. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் 13 வகையான புற்றுநோய் அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளனர்.

அப்படி பெண்களை அதிகம் தாக்கும் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், மெனிங்கியோமா, மல்டிபல் மைலோமா, கருப்பை புற்றுநோய், கணைய புற்றுநோய், வயிற்று புற்றுநோய், தைராய்டு புற்றுநோய் என 13 வகையான புற்றுநோய்களை உலகம் முழுவதிலும் கண்டறிந்துள்ளனர்.

இதற்கு ஒரே தீர்வு உடல் எடையைக் குறைப்பதும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மட்டுமே என்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி மேற்கொள்வது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, உடல் பருமனுக்கு காரணமான உணவுப் பழக்கங்களைக் கைவிடுதல், ஆல்கஹால் குடிப்பதை குறைத்தல் அல்லது தவிர்த்தல் என்பன போன்ற விஷயங்களைப் பின்பற்றினாலே உடல் எடையைக் குறைக்கலாம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here