Home செய்திகள் இந்தியா இனி போர் வேண்டாம் ! கிம் ஜாங் உன் புது முயற்சி..

இனி போர் வேண்டாம் ! கிம் ஜாங் உன் புது முயற்சி..

382
0
Kim Jong-un
Share

உலகம் முழுவதும் வடகொரியாவின் அணு ஆயுதத்தைக் கண்டு பயம் கொண்டனர். தற்போது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இனி போர் ஏதும் தொடுக்க மாட்டோம், போர் வேண்டாம் என்று தெரிவித்து புது முயற்சி.

உலகம் முழுவதும் உள்ள ஏராளமான நாடுகள் வடகொரியா மீது தனி பயத்திலிருந்தனர். ஏனென்றால் இந்த நாட்டில் தான் ஏராளமான அணு ஆயுதங்கள் உள்ளன. அது மட்டுமின்றி தொடர்ந்து பல்வேறு அணு ஆயுத சோதனைகளையும் நடத்தி வந்தனர். இதன் காரணமாக வடகொரியாவின் மீது அமெரிக்கா தம் வெறுப்பைப் பொருளாதாரத் தடைகளை விதித்து வலியுறுத்தியிருந்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் – கிம் ஜாங் உன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் கூட இதில் பலனளிக்கவில்லை. அதை அடுத்துத் தொடர்ந்து பல ஏவுகணை சோதனைகளை, நடத்தியது வடகொரியா. இந்த கொரோனா பரவல் காலத்தில் ஏராளமான சர்ச்சைகளுக்கும் இவர் ஆளானார். இவர் இறந்து விட்டதாகவும் சர்ச்சைகள் கிளப்பின.

ஆனால் தற்போது தென்கொரியா உடன் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தினத்தையொட்டி 67-வது ஆண்டு போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவே வடகொரியா பல்வேறு அணு ஆயுதங்களை இது நாள் வரை தயாரித்து வந்தது.

தற்போது அணு ஆயுத சக்தியில் உலக அளவில் பெரும் பலம் பொருந்திய நாடாக வடகொரியா விளங்குகிறது. இதனால் நாட்டின் பாதுகாப்பும், எதிர்காலமும் உறுதி செய்யப்பட்டது. எனவே இனி இந்த மண்ணில் போர் ஏதும் ஏற்படாமல் இருக்கப் பாடுபடுவேன் என கிம் ஜாங் உன் பேசினார்.

இந்த கிம் ஜாங் உன்னின் பேச்சு உலக நாடுகள் மத்தியில் நம்பப்படுமா என இனி வரும் காலங்களில் தான் தெரியவரும் என்று கொரியா நியூஸ் ஏஜென்சி ஒன்று தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here