Home செய்திகள் இந்தியா IRCTC வழங்கும் புதிய கிரெடிட் கார்ட்…

IRCTC வழங்கும் புதிய கிரெடிட் கார்ட்…

370
0
Share

தனியார் ரயில் சேவை நிறுவனமான IRCTC, SBI வங்கியுடன் இணைந்து ரூபே கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளனர். இதனை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகம்  செய்து தொடங்கி வைத்தார்.

இந்த IRCTC நிறுவனம் இந்தியா முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை தன் வசம் கொண்டுள்ளது. இதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு போன்ற சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது. ஒரு நாளைக்குக் குறைந்தது 9 லட்சம் வரை இந்த நிறுவனத்தின் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த IRCTC மற்றும் SBI வங்கி இணைந்து தற்போது ரூபே கிரெடிட் கார்ட் என்ற ஒரு புதிய கிரெடிட் கார்ட் திட்டத்தை அமல்படுத்தி உள்ளனர். இந்த கிரெடிட் கார்டு மூலமாக வாடிக்கையாளர்கள் தங்கள் பயணத்திற்கான ரயில் டிக்கெட்டை பணம் ஏதும் செலுத்தாமல் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்திப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமில்லாமல் ஆன்லைன் வாயிலாகப் பொருட்கள் வாங்குவது, வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவது, போன்றவற்றிற்குப் பயன்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த கார்டைப் POS மிஷின் மூலம் பயன்படுத்தும்போது கொரோனா பரவல் ஏதும் ஏற்படாது என்று தெரிவிக்கின்றனர். ஏனென்றால் இந்த கார்டை POS மெஷின் மீது வைத்தால் போதுமாம் ஆட்டோமேட்டிக் ரீடிங் ஆகுமாம்.

இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருப்பதாவது :
இனி வரும் காலங்களில் கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்கப் பயணத்திற்காகப் பணப்பரிமாற்றங்கள் குறைந்துவிடும். இது போன்ற கார்ட்கள் மூலமாகத்தான் ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யவும், பதிவு செய்யவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.

இந்த கிரிடிட் கார்டு மூலம் பொருட்கள், பொழுதுபோக்கு, பணப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் எளிதில் செய்ய முடியும். இதற்கு ஏராளமான சலுகைகளும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த கார்டை விரைவில் 3 கோடி நபர்களுக்கு வழங்கும் வகையில் கண்காணித்து உறுதிசெய்ய உள்ளோம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here