Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் வேலை தேடுபவர்களுக்கு புதிய இணையதளம் தமிழக அரசு நடவடிக்கை…

வேலை தேடுபவர்களுக்கு புதிய இணையதளம் தமிழக அரசு நடவடிக்கை…

438
0
tn
Share

தனியார் நிறுவனங்களையும் வேலை தேடுபவர்களையும் இணைக்கும் விதத்தில் தமிழக அரசு ஒரு புதிய  இணையதளத்தை(www.tnprivatejobs.tn.gov.in)  உருவாக்கியுள்ளது. அதில் வேலை தேடும் இளைஞர்கள் தங்களுடைய கல்வித்தகுதி வயது முன் அனுபவம் , வேலை குறித்த விருப்பம் என அனைத்து தகவல்களையும் அந்த இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். அதே போன்று தனியார்த் துறை சார்ந்த சிறு, குறு முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை தங்கள் நிறுவனத்திற்கு காலியாக உள்ள இடங்களைப் பதிவேற்ற வேண்டும்.
tnஅதனைத் தொடர்ந்து அந்த பணியிடங்களுக்குத் தேவையான மற்றும் தகுதியான நபர்களை இணையம் வழியே நேர்காணல் செய்து பணி அமர்த்திக் கொள்ளும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு எந்தவித கட்டணமும் இன்றி வேலை அளிப்போர் மற்றும் வேலை தேடுவோர் அனைவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
 ஏற்கனவே அனைத்து மாவட்டங்களிலும் சிறிய நிறுவனம் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி ஏராளமான பட்டதாரிகளுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் வழிவகை செய்து கொண்டுள்ளது. எனவே இந்த இணையம் மூலம் வேலை தேடுபவர்கள் தங்களுக்கான வேலையில் சேர்ந்து கொள்ளலாம் அல்லது நேர்காணல் நடத்தி நிறுவனங்கள் தேவையான தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here